• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

166.. "ராயபுரத்துக்கு" என்னாச்சு.. ரயில்வே ஸ்டேஷனுக்கு ராயல் சல்யூட்.. பூரிப்பில் மிதக்கும் சென்னை

Google Oneindia Tamil News

சென்னை: ராயபுரம் பற்றி தான் சென்னை முழுக்க ஒரே பேச்சாக இருக்கிறது.. சோஷியல் மீடியா முழுக்க ராயபுரம் போட்டோக்கள்தான் நிறைந்து வழிகின்றன.. என்ன காரணம்?

இந்தியாவின் பழமையான ரயில் நிலையம்தான் ராயபுரம் ரயில் நிலையம்.. இந்த ரயில் நிலையத்துக்கு தற்போது 166 வயதாகிறது.

தெற்கு ரயில்வேயின் சென்னை புறநகர் வலையமைப்பில் ராயபுரம் ரயில் நிலையம் முக்கிய நிலையமாகும். இது, இந்தியாவில் தற்போது இயங்கி வரும் பழமையான ரயில் நிலையமாகும்.

சுரங்க பாதைக்கு வரவேண்டாம்னு எச்சரித்தும் ராயபுரம் சுரங்கத்தில் சிக்கிய லாரி.. 2 மணி நேரம் போராட்டம்சுரங்க பாதைக்கு வரவேண்டாம்னு எச்சரித்தும் ராயபுரம் சுரங்கத்தில் சிக்கிய லாரி.. 2 மணி நேரம் போராட்டம்

 தென்னிந்தியா

தென்னிந்தியா

கடந்த 1849-ம் ஆண்டு மெட்ராஸ் ரயில்வே நிறுவனத்தின் மறுசீரமைப்பால், தென்னிந்தியாவில் புதிய ரயில் பாதைக்கான திட்டம் புத்துயிர் பெற்றது... செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் ஆங்கிலேய வணிகர்கள் மற்றும் பூர்வீக வாசிகளின் குடியேற்றங்கள் இருந்ததால், புதிய நிலையத்துக்கான இடமாக ராயபுரம் தேர்வு செய்யப்பட்டது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

மோட்டார்கள்

மோட்டார்கள்

வில்லியம் அடெல்பி டிரேசி என்பவர் பாரம்பரிய பாணியில் இந்த ரயில் நிலையத்தை வடிவமைத்தார்... இந்த ரயில் பெட்டிகள் மெட்ராஸ் சிம்சன் & கோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டிருக்கிறது.. இந்த ரயிலுக்கு தேவையான மோட்டார்கள், இங்கிலாந்தில் இருந்து கடல் மார்க்கமாக சென்னைக்கு வரவழைக்கப்பட்டதாம்.. அதுமட்டுமல்ல, ரயிலில் பயணிக்க முதல் வகுப்புக்கு 5 ரூபாய், இரண்டாவது வகுப்புக்கு 3 ரூபாய் மற்றும் மூன்றாம் வகுப்புக்கு ஒரு ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

ஹாரிஸ்

ஹாரிஸ்

இப்படி ஒரு கட்டணம், அந்த காலத்தில் மிக மிக அதிகமாகும்.. 3 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மட்டும் டிக்கெட் எடுக்க தேவையில்லையாம். 1856-ம் ஆண்டு ஜுன் 28-ல் அப்போதைய கவர்னர் லார்ட் ஹாரிஸ் இந்த ரயில் நிலையத்தை திறந்து வைத்தார்.. அதுமட்டுமல்ல, அந்த ரயிலில் அவரே ஏறி பயணமும் செய்துள்ளர்.. அவருடன் 300 ஐரோப்பியர்கள் ஆற்காடுக்கு முதல் ரயிலில் பயணம் மேற்கொண்டனர். அப்போது முதல், தென்னிந்தியாவில் முதல் பயணிகள் சேவையை ராயபுரம் ரயில் நிலையம் வழங்கியது...

முத்திரை

முத்திரை

2வது ரயில் சேவை திருவள்ளூருக்கு துவங்கப்பட்டுள்ளது.தென்னிந்தியாவின் முதல் ரயில் பாதை ஜூலை 1, 1856 அன்று போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. இதன்மூலம், ரயில்வேயின் வளமான வரலாற்றில் தன்னுடைய முத்திரையையும் பதிவு செய்தது. அப்போது முதல் பயணிகள் ரயில் சேவை, ராயபுரம் - வாலாஜா சாலை வரை இயக்கப்பட்டது. சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை பீச் - அரக்கோணம் மார்க்கத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளது.

 எக்ஸ்பிரஸ்

எக்ஸ்பிரஸ்

இப்போது, 40 ஜோடி மின்சார ரயில்களும், 7 ஜோடி விரைவு ரயில்களும் கையாளப்படுகின்றன... மாதம் ஒன்றுக்கு 10,500 பேர் இந்த ஸ்டேஷனுக்கு வந்து செல்கின்றனர்... இதன்மூலம், சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் மாத வருமானமாக ஈட்டப்படுகிறது. பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இந்த ராயபுரம் ரயில் நிலையம், கடந்த ஜுன் 28ம் தேதிதான், 166 வருடங்களை நிறைவு செய்துள்ளது... அதுமட்டுமல்ல, இந்திய ரயில்வேயின் மகுடத்தில் ஒரு மாணிக்கமாக இந்த ரயில் நிலையம் தொடரும் என்றும் தெற்கு ரயில்வே புகழாரம் சூட்டியுள்ளது.

 பூரிப்பு - பெருமை

பூரிப்பு - பெருமை

மேலும், இந்த ரயில் நிலைய கட்டிடத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆக மொத்தம், தென்னிந்திய ரயில் போக்குவரத்தின் வரலாறு, சென்னையில் இருந்து தான் துவங்கியது, அதுவும் ராயபுரத்தில் இருந்துதான் துவங்கியது என்பதைவிட வேறென்ன பெருமை நமக்கு இருந்துவிட முடியும்?

English summary
major incident in Royapuram, oldest surviving railway station in India, celebrates 166th anniversary ராயபுரம் ரயில்நிலையம் தன்னுடைய 166 வயதை நிறைவு செய்துள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X