1980களில் இருந்து... இந்தியாவை குலைநடுங்க வைத்த மிக கோரமான ரயில் விபத்துகள் எவை தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஒடிஷா, பீகாரை தொடர்ந்து ஆந்திராவில் இரு பயணிகள் ரயில்கள் மோதியதில் இதுவரை 19 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
1980களில் இருந்து இதுவரை இந்தியாவில் நிகழ்ந்த மிக கோரமான விபத்துகளும் உயிரிழப்புகளும்:

- 1981-ம் ஆண்டு பீகாரில் புயல் காரணமாக ரயில் ஆற்றில் விழுந்தில் 800 பேர் பலியாகினர்.
- 1985-ம் ஆண்டு பிப்ரவரி 23-ல் ராஜ்நந்த்காவில் பயணிகள் ரயில் தீப்பிடித்து 50 பேர் இறந்தனர்
- 1987- தமிழ்நாட்டில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மீது தமிழ்நாடு விடுதலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 25 பேர் பலியாகினர்.
- 1990-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி பாட்னா அருகே பயணிகள் ரயிலில் தீப்பிடித்ததில் 70 பேர் கருகி பலியாகினர்.
- 1993-ம் ஆண்டு டிசம்பர் 21-ல் ராஜஸ்தான் ரயில் விபத்தில் 71 பேர் உயிரிழந்தனர்.
- 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ந் தேதி டெல்லி நோக்கி சென்ற புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது மோதியதில் 250 பேர் பலியாகினர்.
- 1996-ம் ஆண்டு ஏப்ரல் 18-ல் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்- பேருந்து மோதிய விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.
- 1997-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதியன்று அகமதாபாத்-ஹவுரா எக்ஸ்பிரஸ் சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் ஆற்றில் விழுந்ததில் 71 பேர் பலியாகினர்.
- 1998-ம் ஆண்டு நவம்பர் 26-ல் பஞ்சாப் ஃபிராண்டியர் மெயில், சீயல்தா எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதியதில் 202 பேர் இறந்தனர்.
- 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ல் பிரம்மபுத்ரா மெயில், அவத்-அசாம் எக்ஸ்பிரஸ்
- ஆகியவை மோதியதில் 285 பேர் உயிரிழந்தனர்.
- 2000-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி அமிர்தசரஸ் சென்ற ஹவுரா மெயில் சரக்கு ரயில் மீது மோதி 44 பேர் பலியானார்கள்.
- 2001-ம் ஆண்டு மே 31-ந் தேதி உ.பி.யில் பேருந்து மீது ரயில் மோதியதில் 31 பேர் உயிரிழந்தனர்.
- 2001-ம் ஆண்டு ஜூன் 22-ல் மங்களூர்-சென்னை மெயில் கேரளா கடலுண்டி ஆற்றில் விழுந்து 59 பேர் உயிரிழந்தனர்.
- 2002-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி ஹவுரா- டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானதில் 130 பேர் மரணித்தனர்.
- 2003-ம் ஆண்டு மே 15-ந் தேதி பஞ்சாப் லூதியானா அருகே ரயில் தீப்பிடித்ததில் 38 பேர் உயிரிழந்தனர்.
- 2003-ம் ஆண்டு ஜூலை 20ந் தேதி கோல்கொண்டா எக்ஸ்பிரஸ் விபத்தில் 21 பேர் பலியாகினர்.
- 2003-ம் ஆண்டு ஜூன் 22-ந் தேதி மகாராஷ்டிரா ரயில் விபத்தில் 51 பேர் பலியாகினர்.
- 2005-ம் ஆண்டு பிப்ரவரி 3-ல் மகாராஷ்டிரா ரயில், டிராக்டர் மோதி 50 பேர் மரணம் அடைந்தனர்.
- 2005-ம் ஆண்டு ஏப்ரல் 21-ல் குஜராத்தில் சாபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
- 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந் தேதி செகந்திராபாத்தில் இருந்து காக்கிநாடா சென்ற கவுதமி எக்ஸ்பிரஸ் தீப்பிடித்து 32 பேர் பலியாகினர்.
- 2009-ம் ஆண்டு பிப்ரவரி 14 -ந் தேதியன்று கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடபுரண்டு 16 பேர் மரணமடைந்தனர்.
- 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ல் உத்தரப் பிரதேசத்தில் இரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதியதில் 22 பேர் பலியாகினர்.
- 2010-ம் ஆண்டு மே 28-ந் தேதி மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 100 பேர் பலியாகினர்.
- 2010-ம் ஆண்டு ஜூலை 19-ல் மேற்கு வங்கத்தில் உத்தர பங்கா எக்ஸ்பிரஸ், வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் மோதிக் கொண்டதில் மொத்தம் 62 பேர் இறந்தனர்.
- 2010-ம் ஆண்டு செப்டம்பர் 20-ந் தேதி மத்தியப் பிரதேசத்தில் குவாலியர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர்.
- 2011-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி உத்திரப் பிரதேசத்தில் பேருந்து மீது ரயில் மோதியதில் 38 பேர் மரணமடைந்தனர்.
- 2012- ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி டெல்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர் அருகே தீப்பிடித்து 30க்கும் மேற்பட்டோர் கருகி உயிரிழந்தனர்.
- 2013-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி பெங்களூர்-நாந்தெட் எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்து 26 பேர் பலியாகினர்.
- 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ந் டதேதி பீகார் ககாரியாவில் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் மோதியதில் 28 பேர் பலி.
- 2014-ம் ஆண்டு மே 4-ந் தேதி திவா சாவந்த்வாதி பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 20 பேர் உயிரிழந்தனர்.
- 2015-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து உ.பி. வாரணாசிக்கு சென்ற ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 34 பேர் பலியாகினர்.
- 2016-ம் ஆண்டு நவம்பர் 20-ந் தேதி உ.பி.கான்பூரில் பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 150 பேர் பலியாகினர்.
- 2017-ம் ஆண்டு ஜனவரி 22-ந் தேதி ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் ஹீராகுட் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி தடம் புரண்டு 39 பேர் பலி.
- 2017-ம் ஆண்டு ஆகஸ்ட்19-ல் உ.பி. முசாஃபர்நகரில் கலிங்கா-உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 23 பேர் உயிரிழந்தனர்.
- 2018-ம் ஆண்டு அக்டோபர் 19-ல் பஞ்சாப் ரயில் விபத்தில் 61 பேர் பலியாகினர்.
- 2023-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி ஒடிஷாவின் பாலசோர் ரயில் விபத்தில் 288 பேர் மரணம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications