"ப்ளீஸ் குழப்பிக்காதீங்க.. இது மக்கள் கேன்டீன்".. கமல் அல்டிமேட் பிளான்.. இந்த ஒரு அறிவிப்பு போதுமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்கள் நீதி மய்யம் சார்பாக இன்று வெளியிடப்பட்டு இருக்கும் "மக்கள் கேண்டீன்" அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது .

தமிழகத்தில் தேர்தல் என்றாலே வாக்குறுதிகள் அதிக முக்கியத்துவம் பெறும். தமிழகத்தில் கொடுக்கப்படும் தேர்தல் வாக்குறுதிகள் எப்போதும் இந்தியா முழுக்க கவனம் பெறுவது வழக்கம். பல தொலைநோக்கு திட்டங்கள், அதிரடி அறிவிப்புகள், இலவச திட்டங்கள் என்று தமிழக கட்சிகளின் வாக்குறுதிகள் அதிக கவனம் ஈர்க்கும்.

இந்த முறை அதிமுக, திமுக இரண்டும் மிகவும் சிறப்பான வாக்குறுதிகளை அளித்து உள்ளன. இன்னொரு பக்கம் இன்று மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தேர்தல் அறிக்கை

கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அனைத்து நகராட்சிக்கும் மெட்ரோ சேவை, நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு, தற்சார்பு கிராமங்கள் என்று பல முக்கிய அறிவிப்புகள் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இதில் கமல் சொன்ன ஒரு விஷயம் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

கேண்டீன்

கேண்டீன்

இந்த தேர்தல் அறிக்கையில் மக்கள் கேண்டீன் அமைக்கப்படும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். அதாவது மக்கள் கேண்டீன் என்றால் உணவு கொடுக்க மாட்டார்கள். ஆனால் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும். மிகவும் குறைவான விலையில் அனைத்து பொருட்களும் அரசு மூலமே விற்கப்படும் என்று கமல்ஹாசன் கூறிஉள்ளார்.

 குழப்பம்

குழப்பம்

இது அம்மா உணவகம் போன்ற திட்டம் கிடையாது என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். ராணுவ கேண்டீன் போல, அனைத்து பொருட்களும் விலை மலிவாக மக்களுக்கு இங்கு கிடைக்கும். விலைவாசி உயர்வுக்கு இடையில் இது மக்களுக்கு உதவும். இதனை அம்மா உணவகத்துடன் ஒப்பிட வேண்டாம். இது வேறுமாதிரியான திட்டம் என்று கமல்ஹாசன் விளக்கி உள்ளார்.

 மக்கள் கேன்டீன்

மக்கள் கேன்டீன்

இந்த அறிவிப்பு கண்டிப்பாக மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறும். ரேஷன் கடைகள் போல இதில் எல்லா பொருட்களும் கிடைக்கும். விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் மக்கள் இதனால் அதிக பயன் அடைவார்கள். மக்கள் நீதி மய்யத்தின் இந்த வித்தியாசமான திட்டம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+