திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை
சென்னை: நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி திமுக - மக்கள் நீதி மய்யம் இடையே இன்று 2வது கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு தொடர்பான உடன்பாடு எட்டாத நிலையில் இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் திமுக கறார் காட்டியதால் மக்கள் நீதி மய்யம் அதிருப்தியானது. இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் தான் மக்கள் நீதி மய்யம் எத்தனை தொகுதிகள் கேட்டது? திமுக எவ்வளவு சீட் கொடுக்க முன்வந்தது? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் திமுக கூட்டணி பலமாக உள்ளது. ஏற்கனவே இருக்கும் கட்சிகளுடன் இந்த தேர்தலில் கூடுதலாக பல கட்சிகள் திமுக கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளது. அந்த வகையில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் தேமுதிக, மக்கள் நீதி மய்யம், மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளை சொல்லலாம்.

தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்பட மொத்தம் 21 கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளது. இதனால் திமுக கூட்டணி பலமான கூட்டணியாக காட்சியளிக்கிறது.
திமுக - மநீம பேச்சுவார்த்தை
மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நாளைக்குள் முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன், திமுக பேச்சுவார்த்தையை தொடங்கியது.
மக்கள் நீதி மய்யத்தின் தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்தவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இது மக்கள் நீதி மய்யத்துடன் நடக்கும் 2வது கட்ட பேச்சுவார்த்தையாகும்.
எத்தனை தொகுதிகள் எதிர்பார்ப்பு
இதற்கு முன்பு முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் 2வது கட்ட பேச்சுவார்த்தைக்கு இன்று வரும்படி மக்கள் நீதி மய்யத்துக்கு, திமுக அழைப்பு விடுத்தது. இந்த பேச்சுவார்த்தையின்போது மக்கள் நீதி மய்யம் சார்பில் குறைந்தபட்சம் 6 சட்டசபை தொகுதிகளை திமுகவிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திமுகவின் கணக்கு என்ன?
ஆனால், திமுகவோ வெறும் 2 மட்டுமே மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்க தயார் என தெரிவித்தது.அதோடு அந்த 2 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திமுக கூறியுள்ளது. இதற்கு மக்கள் நீதி மய்யம் ஒப்புக்கொள்ளவில்லை. தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும். அதோடு எங்களின் டார்ச்லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று தெரிவித்தது.
இதனை திமுக ஏற்கவில்லை. இதனால் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.திமுக இப்படி இறங்கி வர மறுக்க முக்கிய காரணம் உள்ளது. அதாவது திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பியாகி உள்ளார். ராஜ்யசபா சீட் என்பது 6 சட்டசபை தொகுதிகளுக்கு சமம்.
கமல் அவசர ஆலோசனை
அதுமட்டுமின்றி ஏற்கனவே பல ஆண்டுகளாக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளே குறைக்கப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் புதிதாக கூட்டணியில் இணைந்து விட்டு சட்டசபை தேர்தலில் 6 தொகுதிகளை மக்கள் நீதி மய்யம் கேட்பது அதன் அதிகமான ஆசையை காட்டுவதாக உள்ளதாக திமுக தரப்பு நினைக்கிறது.
இதனால் திமுக விடாப்பிடியாக நின்று மக்கள் நீதி மய்யத்துக்கு 2 அல்லது 3 சட்டசபை தொகுதிகளை மட்டும் கொடுத்து தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தை நிறைவு செய்துவிடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தான் திமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்பாக நாளை கமல்ஹாசன் சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதில் என்ன விஷயம் பேசினாலும் கூட இறுதியில் திமுக சொல்வதை கேட்டு மக்கள் நீதி மய்யம் பணிந்து விடும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
-
கோவையின் அஸ்திவாரத்திலேயே கை வைத்த செந்தில் பாலாஜி.. மொத்தமாக மாறும் களம் -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தவெகவில் சீட் கிடைக்காத விரக்தி.. திமுகவில் இணைந்தார் அஜிதா! பின்னணியில் அனிதா! -
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
எகிறி அடிக்க ரெடியாகும் வில்லிவாக்கம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆப்பு! திமுக இறக்கிய முக்கிய ஆயுதம்! -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா?












Click it and Unblock the Notifications