தேசியக் கட்சியில் இணைகிறார் கமல் கட்சி Ex நிர்வாகி.. மேலிட அப்பாயின்ட்மெண்ட்டுக்கு காத்திருப்பு..!
சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவரும், கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவர் என அறியப்பட்டவருமான முருகானந்தம் தேசியக் கட்சி ஒன்றில் விரைவில் இணையவிருக்கிறார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்ட முருகானந்தம், அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தோல்வியை தழுவினார்.
கமல்ஹாசனுக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அண்மையில் மக்கள் நீதி மய்யத்திலிருந்து வெளியேறிய இவரை தேசியக் கட்சி ஒன்றின் மாநில தலைமை தங்கள் பக்கம் அழைத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம்
திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த முருகானந்தம் மக்கள் நீதி மய்யத்தின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர். பொறியாளர், ரோட்டர் சங்கத்தின் முன்னாள் ஆளுநர், தன்னம்பிக்கை பேச்சாளர் என பன்முகங்களை கொண்ட இவர், நூற்றுக்கணக்கானோருக்கு தனது நிறுவனம் மூலம் பிழைப்பு கொடுத்து வருகிறார். பொதுவாழ்க்கையில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், அரசியலுக்கு வருவதற்கு முன்பே ரோட்டரி சங்கங்கள் மூலம் நலத்திட்ட உதவிகளை வழங்கியவர்.

கருத்து வேறுபாடு
மக்கள் நீதி மய்யத்தின் தலைமையகத்தில் பவர்ஃபுல் மனிதராக வலம் வந்த இவர், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் களம் கண்டு தோல்வியை தழுவினார். கமல்ஹாசனின் திட்டமிடாத செயல்பாடுகளும், கூட்டணியும் தான் கட்சியின் தோல்விக்கு காரணம் எனக் கூறி ம.நீ. ம.விலிருந்து வெளியேறி கமலுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

நண்பர்கள்
இவர் விலகிய தருணத்தில் சந்தோஷ்பாபு, மகேந்திரன், பத்மப்பிரியா, போன்றோரும் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகினார்கள். இதில் சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ். அகாடமியை சொந்தமாக ஆரம்பித்து அதில் கவனம் செலுத்தத் தொடங்கிய நிலையில், மகேந்திரன் திமுகவில் இணைந்து அக்கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். மகேந்திரன் அளவுக்கு முருகானந்ததுக்கு திமுகவில் வரவேற்பும் இல்லை அழைப்பும் இல்லை. காரணம் மகேந்திரன் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர், இவர் திருச்சியை சேர்ந்தவர்.

இணைப்பு வைபவம்
திருச்சியில் ஏற்கனவே திமுக வலிமையாக உள்ளதால் முருகானந்தத்தை கட்சியில் இணைக்க முதல்வர் ஸ்டாலினும் விரும்பவில்லை. இந்நிலையில் முருகானந்தத்தை தொடர்பு கொண்ட தேசியக் கட்சியின் மாநில தலைமை, தங்கள் கட்சியில் உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என அழைப்பு விடுத்திருக்கிறது. டெல்லி மேலிடத்தின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தால் தலைநகரிலேயே இணைப்பு வைபம் கூட நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications