சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு 8வது இடம்.. கிடைத்த ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் 2.45 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி தலா 40 இடங்களிலும் சமத்துவ மக்கள் கட்சி தலா 40 இடங்களிலும் போட்டியிட்டன. ஆனால் ஒரு இடத்திலும் அந்த கட்சி வெற்றிபெற முடியவில்லை.

கடைசி நொடி வரை திக்திக்.. தில்லாக கடைசி நொடி வரை திக்திக்.. தில்லாக "சண்ட" செய்த கமல்.. உருகவைத்த அந்த போட்டோ.. நேற்று என்ன நடந்தது?

அதேநேரம், 2.45 சதவீதம் வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது.

கட்சியில் தலைவர்களை தேடுகிறேன்.. தகுதி இல்லாதவர்களை நீக்க வேண்டியது கடமை.. கமல்ஹாசன் கட்சியில் தலைவர்களை தேடுகிறேன்.. தகுதி இல்லாதவர்களை நீக்க வேண்டியது கடமை.. கமல்ஹாசன்

8வது இடத்தில் ம.நீ.ம

8வது இடத்தில் ம.நீ.ம

வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் இது, 10,58,847 ஆகும். அதாவது வாக்கு சதவீதம் அடிப்படையில் 8வது இடத்தில் அந்த கட்சி உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி, 2.47 சதவீதம் ஓட்டுக்களை பெற்று 7வது இடத்தில் உள்ளது.

திமுக, அதிமுக

திமுக, அதிமுக

நடைபெற்ற சட்டசபை தேர்தலில், திமுகவின் வாக்கு வங்கி 37.7 சதவீதமாக இருந்தது. அதிமுகவில் 33.29 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 4.3 சதவீத வாக்குகளும் பெற்றன. பாட்டாளி மக்கள் கட்சி 3.81 சதவீத வாக்குகளைப் பெற்று 4வது இடத்தில் உள்ளது. பாஜகவின் வாக்குப் பங்கு 2.63 சதவீதமாகவும், மற்றவர்கள் 14.5 சதவீதமாகவும் உள்ளது.

நாம் தமிழர்

நாம் தமிழர்

நாம் தமிழர் 6.85 சதவீதம் ஓட்டுக்களை பெற்றுள்ளனர். ஏனெனில் இந்த கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. பல இடங்களில் 3வது இடத்தை பிடித்துள்ளது.

நோட்டா

நோட்டா

0.07 சதவீதம் பேர் நோட்டாவுக்கு ஓட்டுப்போட்டுள்ளனர். அதாவது 3,45,349 பேர் நோட்டாவுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர். தேமுதிக 0.43 சதவீதம் ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளது.

ஓட்டுக்கள்

ஓட்டுக்கள்

திமுக 17,418503 வாக்குகளைப் பெற்றது, அதிமுக 15,384,907 வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் 1,976,527 வாக்குகளையும், பாஜக 1,213510 வாக்குகளையும் பெற்றது.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், 1,728 ஓட்டுக்களில் தோல்வியடைந்தார். 33 சதவீதம் ஓட்டுக்களை வாங்கியுள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் ம.நீ.ம தனித்துப் போட்டியிட்டு 3 சதவீதம் ஓட்டுக்களை வாங்கியது. 2018ம் ஆண்டுதான் ம.நீ.ம துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Kamal Haasan-led Makkal Needhi Maiam vote share is 2.45 percent, in the recent assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X