சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களை மொத்தமாக அள்ளும் தி.மு.க.. மாலை முரசு சர்வே!

Google Oneindia Tamil News

சென்னை: கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் என்று மாலை முரசு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தேர்தல் கருத்து கணிப்புகளும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம்

இந்த நிலையில் மாலை முரசு டி.வி. நடத்திய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக 47% அதிமுக- 42% வாக்குகள் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

பர்கூர் தொகுதியில் திமுக ஆதிக்கம்

பர்கூர் தொகுதியில் திமுக ஆதிக்கம்

கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக 46% அதிமுக; 40% அமமுக 2% வாக்குகள் பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .பர்கூர் தொகுதியில் திமுக 51% , அதிமுக- 37%, அமமுக 2%, நாம் தமிழர் 3% வாக்குகளும் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

 ஓசூர், தளியிலும் திமுக முன்னிலை

ஓசூர், தளியிலும் திமுக முன்னிலை

ஊத்தங்கரை தொகுதியில் அதிமுக 45%, திமுக 42%, நாம் தமிழர்- 3%, அமமுக- 1%, மநீம 1% வாக்குகளும் பெறும் என்றும் மாலை முரசு டி.வி சர்வேயில் தெரியவந்துள்ளது. இதேபோல் ஓசூர் தொகுதியிலும், தளி தொகுதியிலும் திமுக கூட்டணி முன்னிலை பெறுவதாக கூறியுள்ளது.

திருப்பத்தூரிலும் ஆதிக்கம்

திருப்பத்தூரிலும் ஆதிக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக 46%; அதிமுக 37%; மநீம 5%; அமமுக 4%; நாம் தமிழர் 4% வாக்குகள் பெறும். ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக 41%; திமுக 39%; நாம் தமிழர் 5%; அமமுக 4%; மநீம 3% வாக்குகள் பெறும்.

வாணியம்பாடியில் யார்?

வாணியம்பாடியில் யார்?

ஆம்பூர் தொகுதியில் திமுக 48%; திமுக 39%; அமமுக 5%; நாம் தமிழர் 4%; மநீம 2% வாக்குகள் பெறும். வாணியம்பாடி தொகுதியில் திமுக (முஸ்லிம் லீக்) 45%; அதிமுக- 38% ; அமமுக (ஓவைசி) 5%; நாம் தமிழர் 3%; மநீம 3% வாக்குகள் பெறும் என்றும் மாலை முரசு டிவி நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. மொத்தத்தில் இந்த இரண்டு மாவட்டத்திலும் கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் திமுக முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் என்று கருத்துகணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

English summary
According to the Malai Murasu poll, the DMK will completely dominate Krishnagiri and Tirupati districts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X