96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா?
சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தவெக பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. 234 வேட்பாளர்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தவர் சோழிங்கநல்லூர் தொகுதி வேட்பாளர் ECR சரவணன். 96,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், அந்த தொகுதியில் ஏற்பட்டிருக்கும் மின்வெட்டு பிரச்சனை, மக்களை டென்ஷன் ஆக்கியிருக்கிறது.
மின்வெட்டு பிரச்சனை புதியது கிடையாது. இதற்கு முன்னர் திமுக மற்றும் அதிமுக ஆட்சியிலும் இது இருந்தது. நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்படும்போது மக்கள் ரோட்டில் இறங்கி போராட்டம் நடத்துவார்கள்.

இதுபோன்ற அதிருப்திதான் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளாக மாறியது. திமுக தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் என்றும் சொல்லலாம். ஆனால், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கக்கூடிய தமிழக வெற்றிக் கழகம், இந்த பிரச்சனைகளை சரி செய்யும் என்று மக்கள் நம்பியிருந்தார்கள். ஆனால், மின்வெட்டு பஞ்சாயத்து நாளுக்கு நாள் தீவிரமாகத்தான் ஆகிறதே தவிர, குறைந்தபாடில்லை.
அதிலும் குறிப்பாக, 96,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த சோழிங்கநல்லூர் தொகுதியில், தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள் ரோட்டில் இறங்கி போராட தொடங்கியிருக்கின்றனர். நேற்றிரவு அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் ECRல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது. பலரும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். சிலர், தவெகவுக்கு ஓட்டு போட்டது தப்பு என்றும், அதிலும் 96,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரை ஜெயிக்க வச்சத்துக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்தான் என்று கூறியிருக்கின்றனர்.
ஒரு சிலர் இந்த நிலைமையை கலாய்த்துள்ளனர். தவெகவுக்கு ஓட்டு போட்டீங்கல்ல.. கரண்ட் கம்பத்துக்கு முன்னாடி நின்னு.. உள்ள வந்தா பவருடி அண்ணன் யாரு தளபதினு பாடுங்க.. பவர் வந்துடும் என கிண்டலாக பதிவிட்டிருக்கின்றனர்.
எது எப்படியோ, மாற்றத்திற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த மாற்றம் மின்சாரத்திலிருந்து துவங்கினால் நன்றாகத்தான் இருக்கும்.
அப்படியே உங்க ஏரியால கரண்ட் இருக்கானு கமெண்ட் பண்ணிட்டு போங்க.












Click it and Unblock the Notifications