திண்டுக்கல் சாரதி படத்துக்காக மனசார வாழ்த்தினார்! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் பற்றி கருணாஸ் நெகிழ்ச்சி
சென்னை: மலையாள சினிமாவின் மனிதநேயக் கலைஞர் ஸ்ரீனிவாசனின் மறைவானது, கேரள ரசிகர்களை உலுக்கி போட்டுள்ளது.. ஸ்ரீனிவாசனின் மறைவுக்கு பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும், ரசிகர்களும் தங்களது உருக்கமான அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகர் கருணாஸ் தன்னுடைய உருக்கமான அஞ்சலியை வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
மலையாள மூத்த நடிகர் ஸ்ரீனிவாசன், தமிழிலும் 'லேசா லேசா’, 'புள்ளக்குட்டிக்காரன்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.. இதில் லேசா லேசா’ படத்தில் ஸ்ரீநிவாசன் நடித்திருந்தது தமிழ ரசிகர்களிடம் நல்ல கவனம் பெற்ற ஒன்றாகும்.
டைரக்டர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம், காதலும் உணர்வுகளும் நிறைந்த ஒரு மென்மையான கதையுடன் உருவாக்கப்பட்டது. இதில், ஸ்ரீனிவாசன், கதையின் ஓட்டத்தை மெதுவாக நகர்த்தும் முக்கியமான ரோலில் நடித்திருந்தார்.

லேசா லேசா
அவர் நடித்த கேரக்டர் பெரிய ஹீரோயிசம் கொண்டதாக இல்லாவிட்டாலும், மனிதநேயமும் அனுபவமும் நிறைந்த ஒரு குணச்சித்திரமாக அமைந்திருந்தது. குறிப்பாக, இயல்பான நடிப்புடன் முகபாவனை, மலையாள வாடை கலந்த டயலாக் பேசி தன்னுடைய கேரக்டருக்கு உயிர் கொடுத்திருந்தார் ஸ்ரீநிவாசன்.. இத்தனைக்கும் ஸ்ரீநிவாசன் நடித்த காட்சி எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் கதைக்கு ஒரு நம்பகத்தன்மையை சேர்த்தது.
ஹீரோவின் மனநிலையை புரிந்து கொண்டு, அடிக்கடி அட்வைஸ் தரும்படியாக நடித்திருந்த அவரது நடிப்பு, படம் முடிந்த பிறகும் நினைவில் நிற்கும் வகையில் இருந்தது.
நடிகர் ரஜினி இரங்கல்
நடிகர் ஶ்ரீனிவாசனின் மறைவுக்கு தமிழ் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் ஆடியோவில், "என் நல்ல நண்பன் ஶ்ரீனிவாசன் மரணச் செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் திரைப்படக் கல்லூரியில் என் வகுப்புத் தோழர். ஒரு சிறந்த இயக்குநர், நடிகர் மட்டுமல்ல... மிகவும் நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என மனம் கலங்கி பேசியிருக்கிறார்.
அதேபோல நடிகர் கருணாஸ் வீடியோ வெளியிட்டு, தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.. அந்த வீடியோவில் கருணாஸ் பேசும்போது, "இந்திய அளவில் நான் வியந்து பார்த்த இயக்குனர், எழுத்தாளர், நடிகர்தான் அண்ணன் ஸ்ரீனிவாசன்.. எல்லா தரப்பு மக்களின் நன்மதிப்பையும் பெற்ற ஆகக்சிறந்த கலைஞர்..
வடக்கு நோக்கி எந்திரம்
வடக்கு நோக்கி எந்திரம் என்ற மலையாளப் படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த கேரக்டரைதான நான் திண்டுக்கல் சாரதி படத்தில் ஏற்று நடித்திருந்தேன்.. எனவே அவரை நேரில் சந்தித்து, உடல்மொழியை அவரிடம் பகிர்ந்து கொண்டேன்..
அப்போது அவர் என்னிடம், "இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும், இந்த கேரக்டருக்கு நீ பொருத்தமாய் இருக்கிறாய்" என்று என்னை வாழ்த்தினார். அப்படிப்பட்ட கலைஞரை இன்று நான் இழந்துள்ளேன்.. அவரது மறைவுக்கு என் சார்பாகவும், என் குடும்பத்தினர் சார்பாகவும், நான் சார்ந்துள்ள நடிகர் சங்கத்தின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் நடிகர் கருணாஸ்.
திண்டுக்கல் சாரதி
அழகில்லாத கணவர், தாழ்வு மனப்பான்மை காரணமாக தன்னுடைய அழகான மனைவியை சந்தேகப்படுகிறான். இந்த சந்தேகம் குடும்பத்தை சிதைக்கிறது. அம்மா, தங்கை, தம்பி அவனைவிட்டு பிரிந்து போகிறார்கள்.மனைவியும் தன்னுடைய அம்மா வீட்டிற்கே சென்றுவிடுகிறார்.. சந்தேகம் மனநல விடுதிவரை கணவரை இழுத்து வருகிறது. தவறை உணரும் கணவனை, மனைவி ஏற்றுக் கொள்வதே இந்த படத்தின் கதையாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications