"திராவிட வெற்றிக் கழகம்" புதிய கட்சியை தொடங்கினார் மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா!
சென்னை: மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார். அந்த கட்சிக்கு திராவிட வெற்றிக் கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தம்ழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் நடத்தி வரும் நிலையில், திராவிட வெற்றிக் கழகம் என்று மல்லை சத்யா தொடங்கி இருப்பது விவாதமாகி இருக்கிறது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குறிப்பாக துரை வைகோ மற்றும் மல்லை சத்யா இடையில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது. இதையடுத்து வைகோ மற்றும் துரை வைகோ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மல்லை சத்யா முன் வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் மல்லை சத்யா மதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு, விளக்கம் கேட்கப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 8ஆம் தேதி மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக வைகோ அறிவித்தார். இதன்பின் 2 நாட்களுக்கு முன் புதியக் கட்சியை தொடங்க உள்ளதாக மல்லை சத்யா அறிவித்தார்.
இந்த நிலையில் சென்னை அடையாறில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் மல்லை சத்யா புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார். திருப்பூர் துரைசாமி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முன்னிலையில் தனது புதிய கட்சியின் பெயரை திராவிட வெற்றிக் கழகம் என்று அறிவித்தார். அதாவது கட்சியின் பெயரில் திராவிடம், மறுபக்கம் வெற்றிக் கழகம் இருக்க வேண்டும் என்ற நோக்கில் திவெக என்று உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
கிட்டத்தட்ட தமிழக வெற்றிக் கழகத்தை போல் கட்சியின் பெயர் அமைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தை சுருக்கமாக தவெக என்று அழைக்கும் நிலையில், இந்தக் கட்சியை சுருக்கமாக திவெக என்று அழைக்கப்படும். அதேபோல் TVK என்பதை போல், DVK என்று அழைக்கப்படலாம். அதேபோல் புதியக் கட்சி தொடங்கினாலும், தன்னுடைய ஆதரவு திமுக கூட்டணிக்கே என்று மல்லை சத்யா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதனால் இந்தக் கட்சி தவெகவுக்கு போட்டியாக தொடங்கப்பட்ட கட்சியா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2016ல் தேமுதிகவில் இருந்து விலகி வந்த எம்எல்ஏ-க்களை வைத்து மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டு, திமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. அதேபோல் தற்போது திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி உருவாகி இருக்கிறது.
-
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications