மாம்பலம் ரயில் நிலையத்தில் நடக்கும் மாயாஜாலம்.. தெற்கு ரயில்வே செய்து வரும் சூப்பர் சம்பவம்
சென்னை: 'அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்' என்ற திட்டத்தின் கீழ் மாம்பலம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகளை ஜூலைக்குள் முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
'அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்' என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,309 ரயில் நிலையங்கள் படிப்படியாக மேம்படுத்தப்பட உள்ளன. இதில் தெற்கு ரயில்வேயில் 116 நிலையங்கள் மேம்படுத்த அடையாளம் காணப்பட்டன.

இதையடுத்து தெற்கு ரயில்வேயில் கடந்த நிதி ஆண்டில் (2023-24) அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு ரூ.4,100 கோடி செலவிடப்பட உள்ளது. தமிழகத்தில் 75, கேரளாவில் 35, புதுச்சேரியில் 3, கர்நாடகாவில் 2, ஆந்திராவில் ஒரு ரயில் நிலையம் என தெற்கு ரயில்வேயில் மொத்தம் 116 நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை ரூ.7,100 கோடியில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
தெற்கு ரயில்வேயில் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 25 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. குறிப்பாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் சென்னை கடற்கரை, பூங்கா, பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ஆகியரயில் நிலையங்களில் மேம்பாட்டு bபணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த ரயில் நிலையங்களில் நடைமேடைகளில் பழைய மேற்கூரைகளை அகற்றி, புதிய மேற்கூரைகள் அமைக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக, நிலையத்தில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். கழிவறை உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும்.
அந்த வகையில், ரூ.14.70 கோடி மதிப்பில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாம்பலம் ரயில் நிலையம் சென்னையின் மையப்பகுதியான தியாகராய நகரில் உள்ள ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையம் தான், தாம்பம் எழும்பூருக்கு அடுத்தபடியாக மிகவும் பிஸியான புறநகர் ரயில் நிலையம் ஆகும்.
தினமும் பல்லாயிரம் பேர் வந்து செல்லும் ரயில் நிலையமாக தி நகர் இருக்கிறது. தி நகர் ரயில் நிலையம் மேற்கு மாம்பலம் பகுதி மக்களுக்கும் முக்கியமான ரயில் நிலையமாகும். இந்த ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு வசதியாக, மேற்கு மாம்பலம் பக்கத்தில் புதிய டிக்கெட் பதிவு அலுவலகம் அமைக்கப்படுகிறது. அனைத்து நடைமேடைகளிலும் தரைத்தளம் மறுசீரமைப்பு செய்யப்பட இருக்கிறது.
ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் பழைய மேற்கூரைகளை அகற்றி, புதிய மேற்கூரைகள் அமைக்கப்பட உள்ளது. பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக, நிலையத்தில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. மேற்கு மாம்பலம் பகுதியில் டூவீலர் பார்க்கிங் வசதி மேம்படுத்தப்படும். இதுதவிர, பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட இருக்கிறது.
மேலும் மாம்பலம் ரயில் நிலையத்தில் மின்தூக்கி அமைக்க கட்டுமானப்பணி முடிந்திருக்கிறது. புதிய ரயில் டிக்கெட் பதிவு அலுவலகம், நடைமேடையில் சிக்னல் பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை வரும் ஜூலைக்குள் நிறைவு பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications