இண்டர்வியூ எடுத்த HR மீதே காதல்.. கேள்வியை தவறாக புரிந்து கொண்டு அலப்பறை செய்த நபர்.. செம காமெடி
சென்னை: கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றும் இளம்வயது எச்ஆர், 30 வயது நபரை இண்டர்வியூ செய்தார். அப்போது எச்ஆர் What are your plans for marriage? என்ற பொதுவான கேள்வியை கேட்டார். இந்த கேள்வியின் அர்த்தத்தை தவறாக புரிந்த நபர், எச்ஆர் தன்னை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். இதனால் தான் பார்க்கும்போதெல்லாம் சிரித்து விட்டு செல்கிறார் என காதல் வயப்பட்ட சம்பவம் பற்றி அவரது நண்பர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக பரவி வரும் நிலையில் பலரும் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
கார்ப்பரேட் அலுவலகங்களில் நடக்கும் சம்பவங்கள் குறித்து பலரும் ‛ரெடிட்' சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அலுவலகத்தின் பணி சுமை, அலுவலகத்தில் நடக்கும் சுவாரசிய சம்பவங்கள் என ஒவ்வொரு விஷயங்களும் பலரும் ‛ரெடிட்' தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது ஒருவர் பகிர்ந்த தகவல் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி கார்ப்பரேட் அலுவலகங்களில் இண்டர்வியூ செல்லும் முன்பு அவர்கள் பயன்படுத்தும் சொற்களின் அர்த்தங்கள் பற்றி நன்கு அறிந்து கொள்வதும், கார்ப்பரேட் அலுவலக ஊழியர்களின் கலாசாரம் பற்றி தெரிந்து வைத்து கொள்வதும் முக்கியம் என்பதை இந்த பதிவு எடுத்துரைத்துள்ளது. அப்படி என்ன நடந்தது வாங்க பார்க்கலாம்?. இதுதொடர்பாக ரெடிட் வலைதளத்தில் ஒருவர் கூறியுள்ளதாவது:
எனக்கு ஒரு நண்பன் உள்ளார். அவருக்கு 30 வயதில் தான் முதல் வேலை கிடைத்தது. ஏனென்றால் நீண்டகாலமாக அரசு பணிக்கு தயாராகி வந்தார். முதல் இண்டர்வியூவுக்கு அவர் அலுவலகத்துக்கு சென்றார். அப்போது எச்ஆர், ‛‛What are your plans for marriage?'' என்ற கேள்வியை முன்வைத்தார். இதற்கு என் நண்பர், ‛‛எனக்கு திருமணம் செய்யும் விருப்பம் இல்லை'' என்று குரலைஉயர்த்தி கூறினார் இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அவருக்கு வேலை கிடைத்துவிட்டது.
சில நாட்கள் சென்றது. அவன் என்னிடம் வந்து, திருமணம் குறித்து எச்ஆர் கேட்ட கேள்வி என்னை உறுத்தி கொண்டு இருப்பதாக கூறினார். இந்த வேளையில் நான் அவருக்கு விளக்கம் கொடுக்க முயன்றேன். பணிக்கு சேரும் ஊழியரின் எதிர்கால திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், அவர்களை எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளவது தான் இந்த கேள்வியின் நோக்கம் என்பதை விளக்கம் முயன்றேன். ஆனால் அந்த முட்டாள் கேட்கவில்லை.
எச்ஆர் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக இன்னொரு காரணத்தை கூறினார். எச்ஆர் தன்னை பார்க்கும்போதெல்லாம் சிரிக்கிறார் என்றார். அதற்கு நான் அது அவர்களின் வேலை. எச்ஆர் என்பவர்கள் அனைத்து ஊழியர்களையும் பார்த்து சிரிப்பார். அவர்களுக்கு பாலின பாகுபாடு கிடையாது.
மேலும் எச்ஆர் என்பவர்கள் நட்பானவர்களாகவும்,எளிதில் அணுககூடியவர்களாகவும் இருப்பார்கள் என்று கூறினேன். அமைதியானவர்களாகவும், நட்பானவர்களாகவும், அணுகக்கூடியவர்களாகவும் இருக்க பயிற்சி பெற்றவர்கள் என்றும் கூறினார். மேலும் அவன் தன்னை ஷாருக்கான் போலவும், எச்ஆரை சிம்ரன் போலவும் நினைத்து கொள்கிறார். அவர் சொன்ன விஷயங்கள் அனைத்தையும் நான் மறுத்ததால் எச்ஆரிடம் பேசி ப்ரூவ் செய்வதாக கூறுகிறான். அரசு வேலைக்கு பல ஆண்டு முயற்சித்த பிறகு இங்கே வேலை கிடைத்துள்ளது. ஆனால் அவனது செயல்பாடு மீண்டும் வேலை இல்லாதவனராக மாறுவான் என்று நினைக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவுக்கு பலரும் வேடிக்கையாக பதிலளித்து வருகின்றனர். பொதுவாக கார்ப்பரேட் இன்டர்வியூவின்போது What are your plans for marriage?' என்ற கேள்வி கேட்கப்படும். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இண்டர்வியூ செல்வோர் அந்த கேள்வியின் அர்த்தத்தை அறிந்து பதிலளியுங்கள். இல்லாவிட்டால் நீங்களும் இப்படி தான் ட்ரோல் செய்யப்படுவீர்கள்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications