சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திறந்து காட்டிய சக்திவேல்.. மிரண்டு போன அதிகாரிகள்.. சென்னை விமான நிலையத்தில் ஷாக்!

Google Oneindia Tamil News

சென்னை : சென்னை துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.40.35 லட்சம் மதிப்புடைய 810 கிராம் தங்கத்தை சக்திவேல் என்ற நபரின் ஆசன வாயில் இருந்து சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர். அவரை போலீசார் கைது செய்தனர்.

Recommended Video

    திறந்து காட்டிய சக்திவேல்.. மிரண்டு போன அதிகாரிகள்.. சென்னை விமான நிலையத்தில் ஷாக்!

    துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் இன்று காலை வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

    சூப்பர்.. தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா..இந்த 7 மாவட்டங்களில் மட்டும் சதமடிக்கும் பாதிப்பு சூப்பர்.. தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் கொரோனா..இந்த 7 மாவட்டங்களில் மட்டும் சதமடிக்கும் பாதிப்பு

    அப்போது ரகசிய தகவலின் அடிப்படையில் , சக்திவேல் என்ற டிப்டாப் ஆசாமியை சென்னை விமான சுங்கத் துறையினர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும்போது பிடித்தனர். விழுப்புரத்தில் வசிக்கும் சக்திவேல் (23) துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னை வந்திறங்கி இருந்தார்

    மலக்குடலில் தங்கம்

    மலக்குடலில் தங்கம்

    அவரிடம் சுங்கத் துறையினர் ஸ்கேன் செய்து தேடியபோது, அவரது மலக்குடலில் இருந்து 948 கிராம் எடையுள்ள நான்கு பார்சலில் தங்க பேஸ்ட் மீட்கப்பட்டது. பிரித்தெடுத்ததில், ரூ. 40.35 லட்சம் மதிப்புள்ள 810 கிராம் 24 கேரட் தங்கம் இருந்தது. அதை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    தங்கம்

    தங்கம்

    இந்த ஆண்டு மார்ச் மாதம், சென்னை விமான சுங்கத் துறை, போலி விக்கின் கீழ் பொருட்களை மறைத்து வைத்திருந்த இரண்டு நபர்களிடமிருந்து ரூ .2.53 கோடி மதிப்புள்ள 5.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்திருந்தனர். அதே மார்ச் மாதத்தில் தங்கம் கடத்தியதாக மற்றொருவர் கைது செய்யப்பட்டார். அவரது மலக்குடலில் இருந்து 622 கிராம் எடையுள்ள மூன்று பார்சலில் தங்க பேஸ்ட்களை பறிமுதல் செய்திருந்தனர்.

    தங்கம் பறிமுதல்

    தங்கம் பறிமுதல்

    இந்நிலையில்தான் துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.40.35 லட்சம் மதிப்புடைய 810 கிராம் தங்கத்தை சக்திவேல் என்ற நபரின் ஆசன வாயில் இருந்து சென்னை விமானநிலைய சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர்.

    சிக்கிய இரண்டு பேர்

    சிக்கிய இரண்டு பேர்

    முன்னதாக துபாயிலிருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.89 லட்சம் மதிப்புடைய 1.8 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் கடந்த 16 ம் தேதி போலீசார் பறிமுதல் செய்தனர். பயணி மற்றும் கடத்தல் தங்கத்தை வாங்கிசெல்ல வந்திருந்த ஆசாமி ஆகியோரையும் கைது செய்திருந்தனர்.

    English summary
    Sakthivel, 23 was held at the Chennai airport for carrying gold in paste hidden inside his rectum. On extraction, 810 grams of 24k gold valued at Rs 40.35 lakhs was recovered and seized.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X