மண்ணுளி கடிச்சிட்டே இருந்தும்.. சிரிச்சிட்டே நின்ற நபர்.. பாக்கெட்டில் பார்த்ததுமே மலைத்த மலப்புரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஓதாயி பகுதியில், டீ கடை ஒன்றிற்கு வந்த தொழிலாளி ஒருவர் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் பாம்பை மறைத்து வைத்துக்கொண்டு வந்துள்ளார்.. அப்போதுதான் இப்படியொரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது,.. இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற் கொண்டு வருகிறார்கள் என்றாலும், இது தொடர்பான அதிர்ச்சி இன்னமும் நீங்கவில்லை.. இந்த விபரீத செயலால் என்ன நடந்தது தெரியுமா?

மலப்புரம் மாவட்டம் ஓதாயி சந்திப்பில் ஒரு டீ கடை உள்ளது.. இங்கு நேற்று மாலை, அமிதுல் இஸ்லாம் (வயது 28) என்பவர் டீ குடிக்க வந்துள்ளார். இவர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்... டீக்கடைக்கு வந்ததிலிருந்தே தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டு ஏதோ ஒரு பொருளை அசைத்துக் கொண்டே இருந்துள்ளார்.

Malappuram Kerala news snake incident viral snake video India shocking news tea shop incident snake in pocket non venomous snake bizarre incident trending news 2026

அவரது செய்கையில் மாற்றத்தைக் கண்ட அங்கிருந்த சக வாடிக்கையாளர்கள், பாக்கெட்டில் என்ன வைத்திருக்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அமிதுல் இஸ்லாம், தனது பாக்கெட்டிற்குள் ஒரு பாம்பு இருப்பதாகக் கூறி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

பாக்கெட்டில் பாம்பு

முதலில் அவர் விளையாட்டாகச் சொல்கிறார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தனர்.. பிறகு, உண்மையிலேயே பாம்பா? எங்கே வெளியே எடுத்து காட்டுங்க? என்று கேஷுவலாக சொன்னார்கள்.

உடனே அமிதுல் இஸ்லாம், படக்கென தனது பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு, படாரென ஒரு பாம்பை வெளியே எடுத்தார்.. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதறிப்போய் அலறியடித்து ஓடினார்கள்.. அந்த நேரம்பார்த்து, அந்தப் பாம்பு அமிதுல் இஸ்லாம் கையை ஆக்ரோஷமாக கடித்துவிட்டது. ஆனால் பாம்பு கடித்த போதிலும், அந்த நபர் வலியைக் காட்டிக்கொள்ளாமல் அதனைத் தொடர்ந்து கையில் பிடித்துக் கொண்டிருந்தது அங்கிருந்தவர்களை மேலும் திகைக்க வைத்தது.

தொடர் கடித்து கொண்டேயிருந்த பாம்பு

பாக்கெட்டிற்குள் நீண்ட நேரம் அடைக்கப்பட்டிருந்ததால் அந்தப் பாம்பு மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டது. அதனால் அமிதுல் இஸ்லாம், அதனை பிடித்து காட்டியபோது, அவரது கையில் பல இடங்களில் கடித்தது.. இதனால் ரத்தம் கொட்ட தொடங்கியது.. ஆனாலும் இஸ்லாம், வலியை வெளிக்காட்டி கொள்ளாமல், அந்தப் பாம்புடன் விளையாட முயன்றுள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக தலையிட்டு அந்தப் பாம்பை அவரிடமிருந்து விடுவித்தனர். அதிக அழுத்தம் மற்றும் பாக்கெட்டிற்குள் அடைபட்டிருந்த காரணத்தால் அந்தப் பாம்பு சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது.

மருத்துவமனை சிகிச்சை

பாம்பு கடியால் காயமடைந்த இஸ்லாம், அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள எடவண்ணா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் விஷம் உடலில் ஏறியிருக்கக்கூடும் என்ற அச்சத்தில், அவர் மேல் சிகிச்சைக்காக மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்குத் தேவையான ரத்தப் பரிசோதனைகள் மற்றும் விஷ எதிர்ப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அவரைத் தாக்கியது மண்ணுளிப் பாம்பு குட்டி, அதாவது விஷமில்லாத வகையை சேர்ந்த பாம்பு என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.. இப்போது இஸ்லாம் தற்போது அபாயக் கட்டத்தைத் தாண்டி சிகிச்சையில் உள்ளார்.

காரணம் என்ன?

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பாம்புக்கடிக்கு உள்ளான நபர், போதையில் இருந்திருக்கலாம் என்றும், அந்தப் போதையில்தான் காட்டில் இருந்த பாம்பைப் பிடித்து பாக்கெட்டிற்குள் வைத்துக் கொண்டு ஊருக்குள் வந்திருக்கலாம் என்றும் சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளனர்..

பாம்பு கடித்த நபர் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ள நிலையில், இந்தச் சம்பவம் மலப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய உயிருக்கு மட்டுமல்லாமல், மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒரு விஷ ஜந்துவை பொது இடத்திற்கு எடுத்து வந்தது கண்டிக்கத்தக்கது என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

டீ குடிக்க வந்த இடத்தில், ஒருவரின் பாக்கெட்டிலிருந்து பாம்பு வெளியே வந்த இந்த விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+