இருளில் மூழ்கிய ஈசிஆர்..பலத்த காற்றுடன் கரையைக்கடக்கும் மாண்டஸ்..கொட்டும் கனமழை
சென்னை: மாண்டஸ் புயல் பலத்த காற்றுடன் கரையைக் கடந்து வருகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் கிழக்குக் கடற்கரைச் சாலை இருளில் மூழ்கியுள்ளது.
மாண்டஸ் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளதால் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு இடையிலான ஈசிஆர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்குக் கடற்கரைச் சாரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும். மின் கம்பங்கள், ஜேசிபி இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் மட்டும் மின் தடை செய்ய வேண்டும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து தீவிர புயலாக மாறியது. மாலையில் வலு குறைந்து புயலாக மாறியது. மாமல்லபுரத்திற்கு அருகே தற்போது புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. சென்னைக்கு அருகே 100 கிலோ மீட்டர் தொலைவில் புயலின் மையப்பகுதி உள்ளது. தரைக்காற்று பலமாக வீசுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை,புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்குக் கடற்கரை சாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இருளில் மூழ்கியுள்ளது. அதேபோல் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications