மாணிக்கம் தாகூர் மேல நடவடிக்கை எடுத்தீங்களா? முக்கிய மீட்டிங்குக்கு நோ சொன்ன ஸ்டாலின்!
சென்னை: ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதில் காங்கிரஸின் ஒரு பிரிவு உறுதியாக இருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலை, முதலமைச்சர் ஸ்டாலினுடன் சந்திக்க வைக்க செல்வப்பெருந்தகை போட்டிருந்த பிளான் சொதப்பியிருக்கிறது. ஸ்டாலின் கடும் கோபத்தில் இருப்பதால், இந்த சந்திப்பு நடக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், அக்கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் ஆட்சியில் பங்கு விஷயத்தில் உறுதியாக இருக்கின்றனர். இந்த விஷயம் திமுக தலைமையை சூடேற்றியிருக்கிறது. இந்த பிரச்சனையின் தீவிரத்தை குறைப்பதற்காகவே வேணுகோபல்-ஸ்டாலின் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த முயற்சி கைகொடுக்கவில்லை.

ஆட்சியில் பங்கு
தன்னுடன் கூட்டணிக்கு வரும் கட்சிக்கு, ஆட்சியில் பங்கு தருவேன் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூறியிருந்தார். இப்படி சொன்னதால் விஜய்யுடன் கூட்டணிக்கு சில கட்சிகள் என்று பேசப்பட்டன. ஆனால், தற்போது வரை அப்படி எந்த கட்சிகளும் வரவில்லை. ஆனால், இந்த ஆப்ஷன் திமுக கூட்டணியிக்குள் ஏழரையை கூட்டியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூரும், பிரவீன் சக்கரவர்த்தியும் ஆட்சியில் பங்கு தந்தால்தான் கூட்டணி என்று விடாபிடியாக உள்ளனர்.
கன்டென்ட் கொடுத்த கதர் தலைகள்
பங்கு வேண்டும் என்பதை யார் சொல்ல வேண்டுமோ, அது அவர்கள் வாயிலிருந்துதான் வர வேண்டும் என்று திமுக எதிர்பார்க்கிறது. காங்கிரஸ் தலைவர் கார்கே சொல்லலாம், ராகுல் காந்தி பேசலாம். இல்லையெனில், செல்வப்பெருந்தகை மூலம் இந்த தலைவர்கள் சொல்லி அனுப்பலாம். அனால், மாணிக்கம் தாகூரும், பிரவீன் சக்கரவர்த்தியும் இந்த விஷயத்தை பேசி வருகின்றனர். அதுவும் முறையாக திமுக தலைமையிடம் பேசவில்லை. எங்கெங்கோ பொது வெளியில் பேசி வருகின்றனர்.
இது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக போய்விட்டது. பாருங்க திமுக கூட்டணி சீக்கிரமாகவே உடைஞ்சிடும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் பேச தொடங்கியுள்ளனர்.
திமுக அதிருப்தி
ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையை முடிக்க வேண்டும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற கதை செட் ஆகாது என்று சொல்லிவிட்டார். ஆனாலும். இவர்கள் அசைந்து கொடுப்பதை போல தெரியவில்லை. இவர்கள் பேசுவதை வைத்துக்கொண்ட எனவே திமுக தலைமை காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருக்கிறது.
செல்வப்பெருந்தகை முயற்சி
இந்த அதிருப்தியை சரி செய்ய செல்வப்பெருந்தகை தலைமையிலானா டீம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக வேணுகோபால் சென்னைக்கு வர வைக்கப்பட்டிருந்தார். அவரை ஸ்டாலினுடன் பேச வைத்து பிரச்சனையின் தீவிரத்தை குறைக்க இந்த டீம் திட்டமிட்டிருந்தது.
ஸ்டாலின் கோபம்
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் சார்பில் நேற்று சென்னையில் பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த வேணுகோபாலை முதலமைச்சரிடம் சந்திக்க வைக்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், கடைசி நேரத்தில் டைம் கொடுக்காமல் முதலமைச்சர் சென்றுவிட்டார். காரணம் கூட்டணி குறித்து இஷ்டத்திற்கும் பேசும் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்காததுதான்
குறிப்பாக மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை இல்லாத வரை, எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது என்பதைதான் முதலமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications