பூணூல் அறுப்பு போராட்டம் கயமைத்தனமானது.. பிராமண சமூகத்திற்கு ஆதரவு கரம் நீட்டும் ஜவாஹிருல்லா
சென்னை: பூணூல் அறுப்பு போராட்டம் என்பது தமிழகத்தின் சமூக அமைதியைக் குலைக்கும் செயல் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உடுப்பியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்குள் விடாததால் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஹிஜாப் அணிந்ததற்கு சிலர் எதிர்வினையாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி தரும் விதமாக பூணூல் அறுப்பு போராட்டம் இன்று நடத்தப்படும் என்று இந்திய தேசிய லீக் கட்சி உள்ளிட்ட சில அமைப்பினர் அறிவித்துள்ளது.

பூணூல் அறுப்பு போராட்டம்
ஹிஜாப் அணியகூடாது என்று வலியுறுத்துபவர்களை எதிர்க்கவும், இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படும் வலி என்ன என்பதை பிறருக்கு உணர்த்தவும்தான் இந்த பூணூல் அறுப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசியலீக் கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹீம் அறிவித்துள்ள பூணூல் அறுப்பு போராட்டத்தை, தமிழ்நாடு பிராமண சமாஜம் கண்டித்துள்ளது

மனித நேய மக்கள் கட்சி
பூணூல் அறுப்பு போராட்டம் கயமைத்தனமானது என மனித நேய மக்கள் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். அவர் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ''கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிய தடைவிதிக்கும் கர்நாடக பாஜக அரசை எதிர்த்து இந்துக்கள், கிறிஸ்தவர்கள், எழுத்தாளர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் உட்பட சமூக நல்லிணக்கத்தை நேசிக்கும் அனைத்து இந்தியர்களும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஹிஜாப்
சமூக வலைதளங்களில் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமது குழந்தைகளுக்கு ஹிஜாப் அணிவித்து புகைப்படம் எடுத்து பதிவேற்றி தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இதுமட்டுமல்ல, ஹிஜாப் வழக்கில் வாதாடியவர்களில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் இருந்தார் என்பதே இந்த மண்ணில் சமூக நல்லிணக்கம் நிலைத்து நிற்பதற்கான சாட்சி.

கயமைத்தனம்
பாசிச சங்பரிவார சக்திகளை அனைத்து சமூக மக்களும் ஓரங்கட்டும் நல்ல சூழல் உருவாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பூணூல் அறுக்கும் போராட்டம் என்று ஒரு சிலர் அறிவிப்பது கயமைத்தனமானது; சமூக அமைதியை சீர்குலைக்கக் கூடியது. வெகுஜன மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு பதிலாக பகைமையை கூர்தீட்டும் இம்முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இந்த அறிவிப்பு வன்மையான கண்டனத்துக்குரியது. அனைத்து மக்களாலும் புறந்தள்ளப்பட வேண்டியது. மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications