மோடியை காக்கா பிடிக்கும் ஸ்ரீதர் வேம்பு? சிஜேபி போராட்டத்தில் வெளிநாட்டு சதியா? வெளுத்த திமுக மாஜி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லியில் போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிலையில் நாட்டை சீர்குலைக்க முயலும் சதிகளுக்கு எதிராக தேசபக்தர்கள் ஒன்றுபட வேண்டும் என ஷோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிவிட்டு இருந்தார். இதற்கிடையே ஸ்ரீதர் வேம்புவின் கருத்து இட்டுக்கட்டு பரப்பப்பட்ட கருத்து எனவும், மோடியிடம் நல்ல பெயர் வாங்க ஸ்ரீதர் வேம்பு முயற்சிக்கிறார் என விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ்.

எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் லட்சக்கணக்கானது ஓட்டுகள் பறிபோய் இருப்பதாகவும் கோடிக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், பாஜக மற்றும் ஆதரவு கட்சிகள் ஆட்சியைப் பிடித்துள்ளதாக கூறி டெல்லியில் போராட்டம் வலுத்துள்ளது.

Mano Thangaraj Sridhar Vembu SIR

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் டெல்லியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என சிஜேபி அழைப்பு விடுத்தது.

எஸ்ஐஆர் விவகாரம்

இந்தநிலையில் அரசியல் கட்சித் தலைவர்களும் டெல்லி ஜந்தர் மந்தரை நோக்க் படையெடுத்தனர். ஆனால் அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். மேலும் சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, மம்தா பானர்ஜி, பினராய் விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவரும் கைது செய்யப்பட்டார். இதற்கு இந்தியா முழுவதும் கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் நாட்டின் பிறப்பகுதிகளுக்கும் இந்தப் போராட்டம் பரவியுள்ளது.

ஸ்ரீதர் வேம்பு

மேலும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும் தலையிட்டுள்ளது. இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாக கருத்து ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் ZOHO நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு. அதில்," வெளிநாட்டு ஆதரவுடன் நிதி உதவியுடன் இந்தியாவை சீர்குலைக்க முயலும் சதிகளுக்கு எதிராக தேச பக்தர்கள் ஒன்றுபட வேண்டும். தொழில்நுட்பம் நமக்கு எதிராக பேராயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த போரை எதிர்கொள்ள நாம் புதிய தொழில்நுட்பங்களை பொறியியல் தீர்வுகளை உருவாக்க வேண்டும்" என பதிவிட்டிருந்தார்.

மனோ தங்கராஜ்

இந்த நிலையில் ஸ்ரீதர் வேம்புவின் கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சரான மனோ தங்கராஜ். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," ஸ்ரீதர் வேம்பு அவர்கள் எனது நண்பர் தான். ஆனால் அவரது கருத்து இட்டுக்கட்டு! பொதுவாகப் போராட்டங்கள் வலுவடைவதை திசைதிருப்ப அதிகாரத்தில் இருப்பவர்கள் இதே தந்திரத்தை கையாள்வது வழக்கம்.

பாஜக ஆட்சி

ஸ்ரீதர் அவர்கள் பாஜக ஆட்சியின் மீது கண்மூடித்தனமான பற்று வைத்திருப்பதால், சக இந்தியரை கொச்சைப்படுத்தியாவது மோடியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால் அவர், உண்மையாகவே அந்நிய சக்திகளின் ஆதிக்கம் குறித்து கவலைப்படக் கூடியவர் என்றால், இந்தியா யாரிடமிருந்து பெட்ரோல் வாங்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டிய போது, மோடி அடிபணிந்தார் அல்லவா, அப்போது மோடியை கண்டித்திருக்க வேண்டும். அமெரிக்காவுடனான தனது தொழில் உறவை துண்டித்திருக்க வேண்டும்.

மோடி அரசு

மட்டுமல்லாமல், மத்தியில் அதிகாரத்தில் இருப்பது பாஜக. பாஜகவிற்கு தெரியாமல் வெளிநாட்டு நிதி இந்தியாவிற்குள் வந்திருக்கிறது என ஸ்ரீதர் நம்புவாரானால், அங்கேயும் மோடி அரசின் தோல்வி தான் வெளிப்படுகிறது. சொந்த நாட்டில் 37 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டிருப்பதாக ECI-யிடம் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் போது தேர்தல் நடத்தப்படுகிறது, பாஜக வெற்றி பெறுகிறது. இது தான் ஜனநாயகமா? இது பகல்கொள்ளை அல்லவா? அதற்கு என்ன சொல்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+