ராமர் கோவில் திறப்பு- 4 சங்கரச்சாரியார்கள் எதிர்ப்பு- மோடி பதில் என்ன?விளாசும் அமைச்சர் மனோ தங்கராஜ்
சென்னை: அயோத்தி ராமர் கோவில் திறப்புக்கு 4 சங்கராச்சாரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து பிரதமர் மோடி என்ன பதில் தரப் போகிறார்? என தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் வரும் ஜனவரி 22-ந் தேதி திறக்கப்படுகிறது.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை தேர்தல் யுக்தியாக மத்தியில் ஆளும் பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில் தர்ம சாஸ்திரங்கள், சனாதன தர்மங்களை மீறி அயோத்தி ராமர் கோவில் அவசர அவசரமாக திறக்கப்படுகிறது. கட்டி முடிக்கப்படாமலேயே ராமர் கோவிலை திறப்பது ஏன்? என இந்து மதத்தின் 4 முக்கிய சங்கரச்சாரியார்களே கேள்விகளை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தர்மசாஸ்திர விதிகளின் அடிப்படையிலோ, பக்தர்களின் நலன்கள் அடிப்படையிலோ, இராமர் கோவில் திறக்கப்படவில்லை என்றால் பாஐக-வின் அரசியல் ஆதாயத்திற்காகவா இப்போது இராமர் கோவில் திறக்கப்படுகிறது? என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் சொல்லவேண்டும்.
— Mano Thangaraj (@Manothangaraj) January 11, 2024
“இராமரை பற்றி நமக்குச் சொல்லிக் கொடுத்தவை…
இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தர்மசாஸ்திர விதிகளின் அடிப்படையிலோ, பக்தர்களின் நலன்கள் அடிப்படையிலோ, இராமர் கோவில் திறக்கப்படவில்லை என்றால் பாஐக-வின் அரசியல் ஆதாயத்திற்காகவா இப்போது இராமர் கோவில் திறக்கப்படுகிறது? என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் சொல்லவேண்டும்.
"இராமரை பற்றி நமக்குச் சொல்லிக் கொடுத்தவை தர்மசாஸ்திரங்களே. அந்த தர்மசாஸ்திரங்களின் விதிகளின் அடிப்படையிலும் இராமர் கோவில் திறக்கப்படவில்லை, பக்தர்களுக்கு நலன் தரும் வகையில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும் இராமர் கோவில் திறக்கப்படவில்லை. இதனைப் பற்றிக் கேட்டால் மோடி ஆதரவாளர்கள் எங்களை எதிரிகளாகப் பார்க்கின்றனர்" என இந்தியாவின் மிக முக்கிய நான்கு சங்கராச்சாரியார்களும் கூறியுள்ளனர். இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களை புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அழைக்காத பிரதமர் மோடி இதற்கு என்ன பதில் தர போகிறார். இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications