ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு ரூ.80000 கோடி! ஈபிஎஸ்க்கு ஆதரவாக அண்ணாமலை.. போட்டுடைத்த மனோ தங்கராஜ்
சென்னை: ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமத்துக்கு ரூ.80000 கோடி மானியம் வழங்கியுள்ளது எனக்கூறி தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையை திமுகவின் அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்தன. தூத்துக்குடியில் பதற்றமான சூழல் ஏற்படவே தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
பொதுமக்கள் அமைதியான வழியில் போராடினர்.இந்த போராட்டம் 100வது நாளை எட்டியது. இதையடுத்து 2018 மே 22ம் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் ஊர்வலம் சென்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி
அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா கெஜதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

விசாரணை அறிக்கை
இந்த ஆணையம் 2018 ஜூன் மாதம் 4ம் தேதி முதல் தொடர்ந்து விசாரணையை துவங்கியது. 4 ஆண்டுகளாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமீபத்தில் ஒப்படைத்தார். இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

பொய் சொன்னாரா எடப்பாடி?
அதன்படி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து எடப்பாடி பழனிச்சாமி டிவியில் பார்த்து தெரிந்து கொண்டதாக தெரிவித்தார். ஆனால் அவருக்கு ஒவ்வொரு நொடியும் துப்பாக்கிச்சூடு நிலவரம் பற்றி அப்டேட் செய்யப்பட்டு இருந்தது என கூறப்பட்டு இருந்தது. இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அண்ணாமலை பேட்டி
இந்நிலையில் தான் பாஜகவின் அண்ணாமலை நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து எடப்பாடி பழனிச்சாமி பொய் சொல்வதாக அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தது. இந்த அறிக்கையை அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை ஏற்று கொள்ளமாட்டோம். போராட்டம் குறித்த அப்போதைய அதிகாரிகள் முதல் அமைச்சருக்க தவல் தெரிவிந்தாலும் கூட அவர் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டிருக்கலாம். இது எபப்டி தவறாகும். எடப்பாடி பழனிச்சாமி கூறியதை ஆணையம் திரித்து கூறியுள்ளது என கூறினார். இதன்மூலம் இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அண்ணாமலை சப்போர்ட் செய்துள்ளார்.

மனோ தங்கராஜ் விமர்சனம்
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பாஜகவையும், அண்ணாமலையையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛முதலமைச்சராக இருந்தவர் டிவியை பார்த்து தான் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை பார்த்ததாக கூறியது சரியே என்கிறார் கார்ப்பரேட்டுகளுக்காக மக்களை ஒடுக்கும் பாசிச பாஜகவை சார்ந்த அண்ணாமலை. ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமத்துக்கு ரூ.80000 கோடி மானியம் வழங்கியுள்ளது பாஜக அரசு. மக்களை சுட்டு கொல்வதும் மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்காக தாரை வார்ப்பதும் அவர்களின் கைவந்த கலை'' என விமர்சனம் செய்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications