த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது மான நஷ்ட வழக்கு.. இன்று தொடுக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான்
சென்னை: த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் மீது இன்று மானநஷ்ட வழக்கு தொடுக்க உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா குறித்து பாலியல் இச்சையை வெளிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக மன்சூர் அலிகான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மன்சூர் அலிகானின் பேச்சை த்ரிஷாவே கண்டித்திருந்தார். இந்த நிலையில் அவர் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது.

இதனிடையே மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மன்சூர் அலிகான் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் அவர் நான் பேசிய கருத்து த்ரிஷாவின் மனம் புண்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அதனால் மனம் வருந்தி த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவருக்கு திருமணம் நடக்கும் போது ஆசிர்வாதம் செய்ய தான் வருவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் த்ரிஷா உள்ளிட்டோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் தனது அறிக்கையில் நேற்று கூறியிருப்பதாவது: குஷ்பு, த்ரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு, நஷ்டஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் சூட், திட்டமிட்டு கலவரம் உண்டு பண்ண, பொது அமைதியை 10 நாட்களாக கெடுத்து, மடைமாற்றம் செய்ய தூண்டிய அனைத்து பிரிவுகளிலும் வழக்குகள் எனது வழக்கறிஞர் குரு தனஞ்செயன் மூலம் நாளை கோர்ட்டில் தொடுக்க உள்ளேன்!

11.11.2023 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் நான் பேசிய 'உண்மை வீடியோவை' தங்களுக்கு அனுப்பி உள்ளேன். இந்த வீடியோவைத்தான், சரியாக ஒருவாரம் கழித்து, 19.11.2023 அன்று சில விஷமிகளால் நான் பேசியவற்றில் முன்னே பின்னே எடிட் செய்யப்பட்டு, த்ரிஷாவை ஆபாசமாக பேசியதாக சித்தரிக்கப்பட்டது!
உண்மை வீடியோவை உங்கள் பார்வைக்கு அனுப்பி உள்ளேன்! மேலும் சில ஆதாரங்களுடன் நாளை வழக்கு தொடுக்க உள்ளேன்! நன்றி! -நடிகர் மன்சூர் அலிகான். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுப்பார் என தெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications