Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு.. வீடியோ ஆதாரத்துடன் கோர்ட்டுக்கு போகும் மன்சூர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் மீது நாளை மானநஷ்ட வழக்கு தொடுக்க உள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஷ்பு, த்ரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு, நஷ்டஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் சூட், திட்டமிட்டு கலவரம் உண்டு பண்ண, பொது அமைதியை 10 நாட்களாக கெடுத்து, மடைமாற்றம் செய்ய தூண்டிய அனைத்து பிரிவுகளிலும் வழக்குகள் எனது வழக்கறிஞர் குரு தனஞ்செயன் மூலம் நாளை கோர்ட்டில் தொடுக்க உள்ளேன்!

 Mansoor Ali Khan to file defamation case against Kushbhu, Trisha

11.11.2023 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில் நான் பேசிய 'உண்மை வீடியோவை' தங்களுக்கு அனுப்பி உள்ளேன். இந்த வீடியோவைத்தான், சரியாக ஒருவாரம் கழித்து, 19.11.2023 அன்று சில விஷமிகளால் நான் பேசியவற்றில் முன்னே பின்னே எடிட் செய்யப்பட்டு, த்ரிஷாவை ஆபாசமாக பேசியதாக சித்தரிக்கப்பட்டது!

உண்மை வீடியோவை உங்கள் பார்வைக்கு அனுப்பி உள்ளேன்! மேலும் சில ஆதாரங்களுடன் நாளை வழக்கு தொடுக்க உள்ளேன்! நன்றி! -நடிகர் மன்சூர் அலிகான்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.நடிகை த்ரிஷா குறித்து பாலியல் இச்சையை வெளிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக மன்சூர் அலிகான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மன்சூர் அலிகானின் பேச்சை த்ரிஷாவே கண்டித்திருந்தார். இந்த நிலையில் அவர் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது.

இதனிடையே மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மன்சூர் அலிகான் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் அவர் நான் பேசிய கருத்து த்ரிஷாவின் மனம் புண்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அதனால் மனம் வருந்தி த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவருக்கு திருமணம் நடக்கும் போது ஆசிர்வாதம் செய்ய தான் வருவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+