மீண்டும் பரபர! திரிஷாவுக்கு எதிராக மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கு: ஐகோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை
சென்னை: நடிகை திரிஷாவுக்கு எதிராக மன்சூர் அலிகான் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.
நடிகை த்ரிஷா குறித்து பாலியல் இச்சையை வெளிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக மன்சூர் அலிகான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மன்சூர் அலிகானின் பேச்சை த்ரிஷாவே கண்டித்திருந்தார். திரையுலகினர் பலரும் கடுமையாக கண்டித்திருந்தனர். நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். நடிகர் சங்கம் மன்னிப்பு கேட்கும் படி வலியுறுத்தியது.
இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைப்படி மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது. இதனிடையே மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் அவர் தான் பேசிய கருத்து த்ரிஷாவின் மனம் புண்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அதனால் மனம் வருந்தி த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். திரிஷாவும், மன்சூர் அலிகானை மன்னிப்பதாக சமூக வலைதளத்தில் சூசகமாக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகை திரிஷா, தன்னை கண்டித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். முழு வீடியோவையும் பார்க்காமல் தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக குறிப்பிட்டிருந்தார்.
முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை அன்று, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications