இந்த டைப் தங்கத்தை வாங்க.. இனிமேல் வங்கி கணக்கை பயன்படுத்த முடியாது.. வருது புதிய சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு வங்கிகள் டிஜிட்டல் கோல் பரிவர்த்தனைகளை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதாவது டிஜிட்டல் கோல்ட் நிறுவனங்களுக்கு தங்கள் வங்கி வழியாக பணம் அனுப்புவதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

முதல் கட்டமாக ஆக்சிஸ் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் தங்கம் சேவைகளை படிப்படியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த சேவை டிசம்பர் 31, 2025 அன்று முழுமையாக முடிவடையும். சேஃப்கோல்ட் வாயிலாக வழங்கப்படும் டிஜிட்டல் தங்கத்தை வாங்குவதற்கான கட்டண சேவைகளை நிறுத்தப் போவதாக வங்கி தெரிவித்துள்ளது.

gold rate silver investment

வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, டிஜிட்டல் தங்கம் தொடர்பான அனைத்து சேவைகளும்-வாங்குதல், விற்பனை செய்தல், பணமாக்குதல், மற்றும் வீட்டு விநியோகம்-வங்கியின் இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கி தளங்களில் பல கட்டங்களாக நிறுத்தப்படும். நவம்பர் 30, 2025 முதல், ஆக்சிஸ் வங்கி தளங்கள் வழியாக டிஜிட்டல் தங்கம் வாங்குவது நிறுத்தப்படும். மேலும், டிஜிட்டல் தங்கத்திற்கான செயலில் உள்ள SIPகள் (முறையான முதலீட்டுத் திட்டங்கள்) அனைத்தும் அன்றிலிருந்து நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

செபி சொன்னது என்ன?

இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), டிஜிட்டல் தங்கம் மற்றும் இ-தங்கம் தயாரிப்புகளில் முதலீடு செய்வதற்கு எதிராக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த முதலீட்டு வழிகள் இருந்தாலும், தங்கத்தின் விலைகளில் ஏற்பட்ட உயர்வு மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் டிஜிட்டல் முறையில் தங்கத்தைச் சொந்தமாக்கும் வசதி ஆகியவை கடந்த ஒரு வருடத்தில் இவை பிரபலமடைவதற்குக் காரணமாக அமைந்தன. இந்த நிலையில்தான் இதில் செய்யப்படும் முதலீடுகளை செபி விமர்சனம் செய்துள்ளது.

டிஜிட்டல் தங்கப் பொருட்கள் பெரும்பாலும் சாதாரண தங்கத்திற்கு மாற்றான முதலீடுகளாகப் பிரச்சாரம் செய்யப்படுகின்றன என்று செபி தெரிவித்துள்ளது. எனினும், இவை கட்டுப்படுத்தப்படாதவை மற்றும் எந்த ஒழுங்குமுறை வரம்பிற்கும் உட்படாதவை என்பதால், முதலீட்டாளர்களுக்கு அதிக அபாயங்களை உருவாக்குகின்றன.

டிஜிட்டல் கோல்டுக்கு பாதுகாப்பு இல்லை

இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் சங்கம் (IBJA), டிஜிட்டல் தங்கம் வழங்குநர்களை சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியின் (SEBI) கீழ் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் ஏமாற்றப்படுவதாக நிலவும் அச்சத்தைப் போக்கலாம் என்று சங்கம் நம்புகிறது.

டிஜிட்டல் தங்க தளங்கள் செபியின் அதிகார வரம்பிற்கு வெளியே செயல்படுகின்றன.. இதனால் அவை நம்பகமானவை அல்ல என்று சமீபத்தில் செபி எச்சரித்ததை அடுத்து, புல்லியன் சங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இளம் முதலீட்டாளர்கள் மத்தியில் உடனடி பணப்புழக்கம் மற்றும் பாதுகாப்பு செலவுகள் இல்லாததால் டிஜிட்டல் தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால் இப்போது திடீரென செபி வெளியிட்டுள்ள அறிக்கை இதன் மீதான நம்பிக்கையை குறைக்கிறது.

பிளாக்செயின் தொழில்நுட்பம்

டிஜிட்டல் தங்கம் என்பது அரிய உலோகத்தை உடல் ரீதியாகப் பெறாமல் தங்கம் வாங்குவதைக் குறிக்கிறது. இதன் விலை தங்கத்தின் விலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் தங்கம் உருவாக்கப்படுகிறது. இது முதலீட்டாளர்களை மின்னணு முறையில் தங்கம் வாங்க, விற்க மற்றும் சேமிக்க அனுமதிக்கிறது.

இது அணுகுவதற்கு எளிதானது மற்றும் அவசர காலங்களில் விரைவாக விற்க உதவுகிறது. பெரிய முதலீடுகள் தேவைப்படும் பாரம்பரிய தங்கக் கொள்முதல்களைப் போலல்லாமல், டிஜிட்டல் தங்கம் அல்லது இ-தங்கம் தயாரிப்புகள் முதலீட்டாளர்களைக் குறைவான தொகையில் தங்கத்தை சொந்தமாக்கத் தொடங்க அனுமதிக்கின்றன. ஆனால் இது பாதுகாப்பற்றது என்று செபி கூறி உள்ளது.

செபியிடம் பறந்த கோரிக்கை

இதையடுத்து டிஜிட்டல் தங்க விற்பனை கிட்டதட்ட 30% வரை குறைந்து உள்ளது. டிஜிட்டல் தங்க விற்பனை மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் சங்கம் (IBJA), டிஜிட்டல் தங்கம் வழங்குநர்களை சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியின் (SEBI) கீழ் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது

"பல்வேறு டிஜிட்டல் தங்க நிறுவனங்கள் எங்களை அணுகியுள்ளன. அவை செபி மூலமாகவோ அல்லது சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரைக்கும் வேறு எந்த ஒழுங்குமுறை அமைப்பின் கீழோ வர விருப்பம் தெரிவித்துள்ளன" என்று இதன் கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+