இருக்கு.. இன்னும் 4 நாட்களுக்கு நல்ல மழை இருக்கு.. வானிலை மையம் குட் நியூஸ்!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Tamilnadu Weather : தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு- தமிழ் நாடு வெதர்மேன்- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முழுக்க மழை பெய்தது. தற்போது தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது. உள்கர்நாடகா முதல் குமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது தற்போது வலுவடைந்துள்ளது.

    Many parts of Tamilnadu may see heavy rain for the next 4 days

    அதேபோல் வெப்பச்சலனமும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தை நோக்கி வலுவான காற்று வீசி வருகிறது. இந்த காற்று காரணமாக தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் இன்னும் வேகமாக 40-45 கிமீ வேகத்தில் காற்று அடுத்த சில நாட்களுக்கு வீசும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, குமரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

    ஆனால் சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+