'வா புத்தாண்டே வாழ்த்துகிறோம் உன்னை!' கவிஞர் வைரமுத்து புத்தாண்டு வாழ்த்து
சென்னை: நாளைய தினம் புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில், கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் நாளைய தினம் கோலாகலமாகப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. 2021 முழுவதும் கொரோனா உடனான போராட்டமாகவே சென்ற நிலையில், 2022இல் உலகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "அறிவு வழிநடத்த.. துணிவு துணையிருக்க.. உழைப்பு செயல்படுத்த.. நேர்மை நிலைநிறுத்த.. என்ன செய்துறும் இன்னல் எம்மை? வா புத்தாண்டே வாழ்த்துகிறோம் உன்னை!
மலர்கொண்டு வா, கனிதந்து போ.. பன்பதை வாழ்க.. மானுடம் வெல்க" என்று புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து இந்த புத்தாண்டு வாழ்த்தை ட்விட்டரில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்,
மேலும், புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் 'தண்ணீர் தேசம்' நாவலில் வைரமுத்து கூறிய ஒன்றையும் இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

2012இல் வெளிவந்த தண்ணீர் தேசம் நாவலில், "அனுபவம் வேண்டுமா இளமையை இழ.. ஆயுள் வேண்டுமா போகம் இழ.. கவிதை வேண்டுமா உன்னை இழ.. காதல் வேண்டுமா இதயத்தை இழ.. வளர்ச்சி வேண்டுமா தூக்கத்தை இழ.. வரவு வேண்டுமா வியர்வையை இழ.. ஒன்றை இழந்தால்தான் இன்னனொன்று" என்று கவிஞர் வைரமுத்து எழுதியிருப்பார். புத்தாண்டையொட்டி வாழ்த்து தெரிவித்து இணையத்தில் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications