ரொம்ப "சீனியர்".. ஈவிகேஎஸ் வந்தால் திமுகவுக்கு சிக்கலாமே.. "இவர்" என்ன இப்படி சொல்லுறாரே! என்னாச்சு?
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற வாய்ப்பு அதிகம் உள்ளது, இவர் சட்டசபைக்கு செல்வதால் தமிழ்நாடு சட்டசபையில் காங்கிரஸ் தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகை பவர் குறையும் என்று ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்த மூத்த பத்திரிகையாளர் பா.கி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் சூடு பிடித்து உள்ளது. அங்கே திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி சார்பாக அதிமுக அணி வேட்பாளர் களமிறக்கப்பட உள்ளார்.
அதேபோல் ஓ பன்னீர்செல்வம் சார்பாக அவரது ஆதரவாளரும் களமிறக்கப்பட உள்ளார். இதெல்லாம் போக பாஜகவும் இங்கே போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனைகளை செய்து வருகிறது. இந்த பல முனை போட்டி காரணமாக ஈரோடு கிழக்கு தேர்தல் சூடு பிடித்து உள்ளது,.

எடப்பாடி பழனிசாமி
இந்த இடைத்தேர்தல் தொடர்பாக ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்த மூத்த பத்திரிகையாளர் பா.கி, எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஜெயலலிதா போல சில எல்லா சமூகத்தினரால் அரவணைக்கப்படும் கட்சியாகவே கொண்டு வர நினைக்கிறார். இப்போது கொங்கு மண்டலத்தில் இடைத்தேர்தல் நடக்கிறது என்பதால் மட்டும் அவர் தீவிரமாக பணியாற்றவில்லை. தென் மண்டலத்தில் தேர்தல் நடந்து இருந்தாலும் அவர் இதே போன்ற முடிவைத்தான் எடுத்து இருப்பார் என்று நினைக்கிறேன். இப்போது கொங்கு மண்டலத்திலும் கூட ஒரு குறிப்பிட்ட சமூகம்தான் எடப்பாடிக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஈரோட்டிலும் கூட அந்த குறிப்பிட்ட சமூகம் மெஜாரிட்டியில் இல்லை என்றே எனக்கு தகவல் வந்தது.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்காக இருந்தாலும் அவர் களமிறங்கி தீவிரமாக வேலை செய்வார். தென் மாவட்டங்களில் தேர்தல் நடந்தாலும் எடப்பாடி இதைத்தான் செய்வார். 2019 பொதுதேர்தலோடு தென் மண்டலத்திலும் சில இடங்களில் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. அந்த இடங்களில் அவர் வெற்றியும் பெற்றார். அதேபோல்தான் தென் மண்டலத்தில் இடைத்தேர்தல் வந்தாலும் எடப்பாடி தரப்பு களமிறங்கும். ஆனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு அந்த அளவு மக்கள் ஆதரவு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

திமுக கூட்டணி
இன்னொரு பக்கம் திமுக கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் நெருங்கி வருகிறது. திமுக கூட்டணி ஏற்கனவே பலமாகத்தான் இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் நிலைப்பாடு கவனிக்கத்தக்கதாக உள்ளது. ஏனென்றால் ஈவிகேஎஸ் இளங்கோவன் முக்கியமான தலைவர். ஆளுமையான தலைவர். தமிழ்நாடு காங்கிரசில் வாழப்பாடி ராமமூர்த்திக்கு பிறகு துடிப்புமிக்க தலைவராக இருப்பவர் இளங்கோவன். இதனால் அவர் வெற்றிபெற வாய்ப்பு அதிகம் உள்ளது. இவர் சட்டசபைக்கு செல்வதால் தமிழ்நாடு சட்டசபையில் காங்கிரஸ் தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகை பவர் குறையும். குறைக்கப்படும்.

மக்கள் நீதி மய்யம்
அவங்க கட்சிக்குள் இருக்கும் சிக்கல்களுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும். இளங்கோவன் வருவதால்.. உட்கட்சி பூசல்கள் குறையும். ஏற்கனவே ரூபி மனோகரன் விவகாரத்தில் கேஎஸ் அழகிரி நிலைப்பாடு ஒன்றும், செல்வப்பெருந்தகை நிலைப்பாடும் வேறு மாதிரி இருந்தது. இப்போது இளங்கோவன் வருவதால்.. உட்கட்சி பூசல்கள் குறையும். ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் சீனியர். அவர்தான் இனி தமிழ்நாடு சட்டசபையில் காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும்.அவர் வந்தால், திமுக சொல்வதற்கு எல்லாம் சட்டசபையில் காங்கிரஸ் அப்படியே தலையாட்டாது. இப்போது திமுகவின் கிளை அமைப்பு போல காங்கிரஸ் செயல்படுகிறது. திமுகவை சட்டசபையில் காங்கிரஸ் புகழ்ந்து தள்ளிக்கொண்டு இருக்கிறது. இளங்கோவன் வந்தால் இது மாறும். தேசிய அளவிலும் இளங்கோவன் கவனம் பெறுவார்.

காங்கிரஸ்
சட்டசபையில் காங்கிரஸ் கொஞ்சம் சுதந்திரமாக செயல்பட வழிவகுக்கும். ஒருவேளை திமுக - இளங்கோவன் இடையே மோதல் ஏற்பட்டால் எதிர்காலத்தில் கூட்டணி கூட முறியும். இது எல்லாமே நடக்க சான்ஸே இல்லை என்று சொல்ல முடியாது. திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்தால் பாஜக - அதிமுக கூட்டணி கூட உடையும். ஸ்டாலின்தான் இளங்கோவனை நிறுத்த வேண்டும் என்று சொன்னதாக செய்தி வந்தது. திருமகன் இறந்ததால், அவரின் தந்தைக்கே இடம் கிடைக்க வேண்டும் என்றுதான் ஸ்டாலின் செய்ததாக நினைக்கிறேன். காங்கிரஸ் வென்றால் திமுகவிற்கு மகிழ்ச்சிதான். காங்கிரஸ் வெல்வதை ஸ்டாலின் மகிழ்ச்சியாகவே ஏற்பார்.

டெஸ்ட்
இந்த இடைத்தேர்தல் டெஸ்ட். மக்களவை தேர்தலை மனதில் வைத்து ஸ்டாலின் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார். ஆனால் லோக்சபா தேர்தல் நேரத்தில் கூட்டணியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒருகாலத்தில் ஒன்றாக இருந்த காங்கிரஸ் - அதிமுக கூட்டணியே மூப்பனாரால் முறிந்தது. அதேபோல் நடக்கலாம். காங்கிரஸ் - திமுக கூட்டணி முறியவே முறியாது என்று சொல்ல முடியாது. இதெல்லாம் யூகம்தான். ஆனால் இதெல்லாம் நடக்காது என்றும் சொல்ல முடியாது, என்று மூத்த பத்திரிகையாளர் பா. கி தெரிவித்துள்ளார்.
-
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக











Click it and Unblock the Notifications