"மிகப்பெரிய நாள்".. இந்த மாவட்டங்கள் எல்லாமே "ஹாட்ஸ்பாட்தான்".. தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய வார்னிங்
சென்னை: வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு வானிலை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழகத்தில் 3 மணி நேரத்திற்குள் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் வங்கக் கடலில் நவம்பர் 9 ல் காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு. இதனால் மழை அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
10,11ஆம் தேதி தமிழகம்,புதுச்சேரியை நோக்கி காற்றழுத்த தாழ்வு நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் புயல் சின்னம் உருவாவது தொடர்பாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை .

சென்னை வானிலை மையம்
சென்னை வானிலை மையத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் இன்று கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். அதேபோல் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வெதர்மேன்
தமிழ்நாட்டில் சென்னையில் மழை லேசாக குறைந்துள்ள நிலையில் தற்போது தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை,மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. அதேபோல் தென் மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

பிரதீப் ஜான்
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு வானிலை குறித்து அப்டேட் வெளியிட்டு உள்ளார். அதில், தென் தமிழ்நாட்டிற்கும் இன்றும் நாளையும் மிகப்பெரிய நாளாக இருக்க போகிறது. தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, புதுக்கோட்டை எல்லாம் தற்போது மழை பெய்ய வாய்ப்பு உள்ள ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக உள்ளன. இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

கனமழை
இந்த மாவட்டங்களில் சில பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மற்றும் மத்திய மாவட்டங்களான திருச்சி, சேலம், கரூரில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளன, என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில் குறிப்பிட்டு உள்ளார். முன்னதாக சென்னை வானிலை குறித்து பிரதீப் ஜான் அப்டேட் கொடுத்து இருந்தார்.

வடசென்னை
அதில், வடசென்னையில் மாலைக்கு பின் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்யும். 30 நிமிடத்தில் மொத்தமாக 60 மிமீ மழை பெய்ய எல்லாம் வாய்ப்பே இல்லை. எனவே ஆங்காங்கே பெய்யும் சிறிய அளவிலான மழைகள் எல்லாம் கண்டிப்பாக அச்சுறுத்தும் மழையாக இருக்காது. சென்னையில் இன்று சூரியன் தென்படும். அதே சமயம் இடை இடையே ஆங்காங்கே மழை பெய்யும், என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்படியே தற்போது சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications