இரவோடு இரவாக.. ரேஷன் கடைகளுக்கு போன உத்தரவு.. தீபாவளி அதுவுமா.. சிலிர்க்க வைக்கும் ஆர்டர்!
சென்னை: தீபாவளி பண்டிகை காரணமாக ரேஷன் கடைகளுக்கு கூடுதல் வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றும் ரேஷன் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கூடுதல் உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை தமிழ்நாடு அரசு விடுமுறை என்று அறிவித்து உள்ளது.

விடுமுறை : பல குடும்பங்களில் தீபாவளி பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட இந்த போனஸ் மிகவும் முக்கியமாக உதவும். இந்தாண்டு நவ. 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை தமிழ்நாடு அரசு விடுமுறை விட உள்ளதாக அறிவித்துள்ளது
தீபாவளி ஞாயிற்று கிழமை வருவதால் திங்கட்கிழமையும் விடுமுறை அறிவித்து உள்ளது. இதற்கான கோப்புகள் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஞாயிற்றுக் கிழமை தீபாவளி என்பதால் மறுநாள் திங்கள் கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளனர் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு. வெளியூர் செல்லும் பொதுமக்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்களின் நலன் கருதி விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளிகள் விடுமுறை: இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 16,895 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகள்: தீபாவளி பண்டிகை காரணமாக ரேஷன் கடைகளுக்கு கூடுதல் வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றும் ரேஷன் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கூடுதல் உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கு நவ.3 மற்றும் நவ. 10 தேதி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை ஈடு செய்யும் வகையில் நவ.13 மற்றும் நவ.25 ஆகிய நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு அறிவிப்புகள்: தமிழ்நாட்டில் தீபாவளியை முன்னிட்டு பல முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் கூட, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 42% இருந்து 46% உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2546.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். 42% அகவிலைப்படி 01.07.2023 முதல் 46%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
புக்கிங் மையங்கள்: தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவுக்கு கோயம்பேட்டில் 10 மையங்களும், தாம்பரத்தில் ஒரு மையமும் செயல்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த மையங்களில் நேரடியாக சென்று புக் செய்ய முடியும். உதாரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளே 10 மையம் உள்ளது. இங்கே சென்று பணம் கொடுத்து புக் செய்ய முடியும்.
இல்லையென்றால் https://www.tnstc.in/home.html பக்கத்தில் புக் செய்ய முடியும். அதில் லாக் இன் செய்து அல்லது செய்யாமல் விவரங்களை கொடுக்கலாம். செல்ல வேண்டிய இடம் , புறப்படும் இடம், நாள் தேதி குறிப்பிட்டால் பேருந்துகள் காண்பிக்கப்படும். அதில் தேவையான டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications