என்ன அவர்களே.. இவர்களேன்னு.. ஸ்கிரிப்ட்டை மறந்துட்டேன்.. மாநாட்டையே ஒரு நிமிடம் ஸ்டன் ஆக்கிய விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அவர்களே.. என்னங்க இது அவர்களே இவர்களே எல்லாம்.. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கையை அறிவித்து விட்டு எல்லாரையும் ஏன் பிரிச்சு பார்க்கனும்.. நான் அப்படி எல்லாம் பேச மாட்டேன் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசி உள்ளார்.,

இரு மொழிக்கொள்கை, ஒன்றிய அரசு, வர்ணாசிரம ப்ரயோகம், வைகை நதி நாகரிகம், மாநில தன்னாட்சி உரிமை, ஆளுநர் பதவி அகற்றம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தங்களின் கொள்கையாக அறிவித்து உள்ளது.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

திருவள்ளுவர், அம்பேத்கர், பெரியார், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் உட்பட 6 பேர் அரசியல் வழிகாட்டிகள் என்று நடிகர் விஜய் அறிவித்து உள்ளார்.இந்த ஐந்து தலைவர்களின் கொள்கை அடிப்படையில் கட்சி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் அதிகார்பூர்வ கொள்கையாக மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இவை வரிகளாக எழுதப்பட்டு காட்சிகளாக திரையில் வைக்கப்பட்டு உள்ளது.

அதோடு தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் தந்தை பெரியார் விஜய்க்கு வழிகாட்டி அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. பெரியாரை முன்னிறுத்தி தமிழக வெற்றி கழகம் தனது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க உள்ளதை தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த நிகழ்வில் பேசிய விஜய், ஒரு குழந்தை முன்பாக பாம்பை கண்டாலும் அந்தப் பாம்பை சிரித்தபடியே கையில் எடுத்து விளையாடும் அந்த குழந்தை. அதே போலத்தான் அரசியல் என்பது பாம்பு அந்த பாம்பை பயமே இல்லாமல் கையில் எடுத்து விளையாட வந்திருக்கிறேன். பாம்பு தான் அரசியல். அத கையில பிடிச்சு விளையாட போறது தான் உங்க விஜய்.

அரசியலில் வந்துவிட்டோம்.. சீரியாஸாக பேச வேண்டும்.. அப்படியே பேசிக்கொண்டே பார்மெட்டை மறந்துட்டேன்.. இப்போ சொல்லுறேன்.. என் ஆனந்த் அவர்களே.. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் அவர்களே.. என்னங்க இது அவர்களே இவர்களே எல்லாம்.. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கையை அறிவித்து விட்டு எல்லாரையும் ஏன் பிரிச்சு பார்க்கனும்.. நான் அப்படி எல்லாம் பேச மாட்டேன்.

அரசியலில் வளவளவென்று பேச கூடாது. புள்ளி விவர புலியாக புள்ளி விவரங்களை அடுக்கி உள்ளோம். இங்க நீ வேற நான் வேற இல்ல, இது இந்தியா...ஏற்கனவே இருக்க அரசியல்வாதிகள் மாறி அதிகமா பேசி டைம் வேஸ்ட் பண்ணப் போறதில்லை அரசியல்வாதிகளை பற்றியும் அதிகமாக பேச போறது இல்லை. இங்க ஆல்ரெடி இருக்கிற அரசியல்வாதிய பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ண போறதும் இல்லை.. அதுக்காக கண்ண மூடிட்டு இருக்கவும் மாட்டோம்.

அறிவியல் மாறிடுச்சு.. உலகம் மாறிடுச்சு.. அரசியல் மட்டும் மாறாமல் இருந்தால் என்ன? அரசியலையும் .மாற்றுவோம். காலத்திற்கு ஏற்றபடி அரசியலில் மாற்றங்களை செய்வோம், என்று விஜய் பேசி உள்ளார், என்று குறிப்பிட்டு உள்ளார்.

கொள்கை: தமிழ்நாட்டில் மீண்டும்.. இன்னொரு சமூக நீதி.. மதச்சார்பின்மை.. கொள்கை கொண்ட கட்சி உருவாகி உள்ளது. மதம், மொழி , சாதி, இனம் ஆகியவை மூலம் பாகுபடுத்தப்படாத கொள்கையான சமூக நீதி.. மதச்சார்பின்மை கொள்கை தமிழ்நாட்டில் பல கட்சிகளின் கொள்கையாக இருந்து வருகிறது.

அந்த வகையில்.. தமிழ்நாட்டில் ஏற்கனவே திமுக இந்த கொள்கையை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது. அதிமுகவும் இந்த கொள்கையை கொண்டே உருவாக்கப்பட்டது. விசிக, மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் இதே கொள்கையுடன் உருவாக்கப்பட்டது. பாஜகவின் வலதுசாரி கொள்கைக்கு எதிராக இந்த கொள்கைகள் அமைந்து உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+