சக்சஸ்.. ஸ்டைலிஷ் தமிழச்சியாக ஐரோப்பாவை சுற்றிய மேயர் பிரியா! சென்னைக்கு தூக்கி வந்த சூப்பர் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு மேற்கொண்ட சென்னை மேயர் பிரியா, 3 நாடுகளில் பின்பற்றப்போகும் திட்டத்தை சென்னையில் தொடங்க உள்ளதாக அறிவித்து இருக்கிறார்.

சென்னை போன்ற வளர்ந்து கொண்டே வரும் பெருநகரங்களுக்கு திடக்கழிவு மேலாண்மை ஒரு பெரிய சவாலாகவே விளங்கி வருகிறது. இந்த நிலையில் வளர்ந்த நாடுகளில் திடக்கழிவு மேலாண்மையை எப்படி செயல்படுத்துகின்றனர் என்று பார்வையிடுவதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்னை மேயர் பிரியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார்.

Mayor Priya said Chennai corporation to set waste energy plant in Kodungaiyur like european countries

அந்த வகையில் கடந்த ஜூன் 19 ஆம் தேதி ரோம் நகரில் இத்தாலி நாட்டின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் டாட் கோராடோ கிளினியை சந்தித்து காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகள் குறித்தும் அதன் அடிப்படையில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் கலந்துரையாடினார்.

இந்த பயணத்தில் சென்னை துணை மேயர் மகேஷ்குமார், சுகாதாரத் துறை கூடுதல் ஆணையாளர் சங்கர்லால் குமாவத் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை பொறியாளர்கள் உள்ளிட்ட பலரும் சென்னை மேயர் பிரியாவுடன் இருந்தனர். அதன் பின்னர் அவர்கள் ரோம் நகரில் உள்ள உர்பேசர் கழிவு சேகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகளை பார்வையிட்டனர்.

இதேபோல் பல்வேறு பகுதிகளுக்கு சென்று திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். ரோம் நகரில் மேயர் பிரியா அணிந்திருந்த ஆடைகளும் பாராட்டுக்களை பெற்றது. அதை தொடர்ந்து பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், இன்று காலை சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "திடக்கழிவு மேலாண்மையை சென்னை மாநகராட்சியில் கையாளுவது மிகவும் சவாலாக உள்ளது. சென்னையில் திடக்கழிவு மேலாண்மை பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. எனவே ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு திடக்கழிவு மேலாண்மை கையாளும் முறை குறித்துஆய்வு செய்தோம்.

திடக்கழிவு மேலாண்மை ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு முறையில் கையாளப்படுகிறது. இத்தாலியில் பிளாஸ்டிகை கையால தனி பிளாண்ட் அமைத்து கையாண்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் பிளாஸ்டிக் சவாலாக உள்ள நிலையில் முதலமைச்சருடன் இதுகுறித்து ஆலோசித்து இத்தாலியில் பயன்படுத்தும் முறையை இங்கு செயல்படுத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும்.

Mayor Priya said Chennai corporation to set waste energy plant in Kodungaiyur like european countries

அதேபோல் ஸ்பெயினில் குப்பைகளை எடுக்கும்போதே லாரிகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியிலும் அதை செயல்படுத்த முடியுமா என ஆலோசிக்க உள்ளோம். இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் செயல்படுத்தப்படும் தொழில் நுட்பம் சார்ந்த திட்டங்களை சென்னையிலும் செயல்படுத்துவது பற்றி முதலமைச்சர் தலைமையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்.

சென்னையில் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வகையில் இரண்டு பயோ சி.என்.ஜி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோயம்பேட்டில் மேலும் 2 சி.என்.ஜி ஆலைகளும் சோளிங்கநல்லூரில் 2 சி.என்.ஜி ஆலைகள் என 4 புதிய பயோ சி.என்.ஜி நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. புதிதாக வேஸ்ட் எனர்ஜி பிளாண்ட் கொடுங்கையூரில் உருவாக்கப்படும்." எனத் தெரிவித்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+