வைகோவை சந்தித்து ஆசிபெற்ற தயாநிதி... திமுக கூட்டணிக்கு வெற்றி என முழங்கிய புரட்சி புயல்
சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள், 18 சட்டசபை தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நம்பிக்கையுடன் கூறி உள்ளார்.
சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் வைகோவிடம் அவர் வாழ்த்து பெற்றுள்ளார்.

அதே போன்று மற்றொரு திமுக வேட்பாளரான கலாநிதியும் வைகோவை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு வைகோ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
40 லோக்சபா தொகுதிகள், 18 சட்டசபை தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். 20ம் தேதி திருவாரூரில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தமது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
நான் தூத்துக்குடியில் இருந்து பிரச்சாரம் தொடங்குகிறேன். கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்து எனது பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறேன்.
இந்த தேர்தலில் ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும். மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும். சனாதன கோட்பாடுகள், சனாதன முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications