சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாட்ஸ் அப்பில் ஆர்டர் கொடுத்தால் 50% தள்ளுபடியுடன் மருந்துகள் வீடு தேடி வரும்

தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் வீடு தேடி வந்து மருந்துகளை வழங்க தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தால் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் வீடு தேடி வந்து மருந்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா உள்ளிட்ட எந்த மருத்துவத் தேவையாக இருந்தாலும், வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தால் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் வீடு தேடி வந்து மருந்துகள் வழங்கப்படும் என தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு 50 சதவிகிதத் தள்ளுபடி விலையில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ஊடரங்கை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் வீடு தேடி வந்து மருந்துகளை வழங்க தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

Drugs with a 50% discount can be found at home if you order on the Whats app in Tamil Nadu

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இதனால், மக்கள் பீதியில் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் வீடு தேடி வந்து மருந்து வழங்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா உட்பட எந்த மருந்து மற்றும் மருத்துவத் தேவையாக இருந்தாலும் 9342066888 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம், தங்களுடைய பெயர், மருந்து, வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, எங்களுடைய மூத்த மருத்துவர்களில் ஒருவர் உங்களைத் தொடர்புகொண்டு, உடல்நலம் குறித்து விசாரித்து என்ன மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையை இலவசமாக வழங்குவார். எங்கள் சங்கத்தில் பல அனுபவம் பெற்ற மருத்துவர்கள் உள்ளனர்.

லாக்டவுன்...குடிமகன்கள் மூர்க்கத்தனமாக முற்றுகை...2-வது நாளாக டாஸ்மாக் மதுகடைகள் விற்பனை ரூ.428 கோடிலாக்டவுன்...குடிமகன்கள் மூர்க்கத்தனமாக முற்றுகை...2-வது நாளாக டாஸ்மாக் மதுகடைகள் விற்பனை ரூ.428 கோடி

என்ன மருந்து தேவை என்பதை தெரிவித்துவிட்டால், இரண்டு மணி நேரத்தில் மருந்து வீடு தேடி வரும். மேலும், கோவிட் சம்பந்தமான மருந்துகள் நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு 50 சதவிகிதத் தள்ளுபடி விலையில் வழங்கப்படும். மற்ற வயதினர்களுக்கு உற்பத்தி விலையிலேயே மருந்துகள் விநியோகிக்கப்படும்.

இதில் 2 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டு கொரோனாவுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Tamil nadu wholesale pharmaceutical distributors Association has decided to search the house and provide medicines to help the Tamil Nadu government. It has been announced that if the information is given through WhatsApp, they will come to the house within the next two hours and give the medicines
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X