கொரோனா 4வது அலையால் ஆபத்தா? மக்கள் என்ன செய்ய வேண்டும்..? நிதி அயோக் உறுப்பினர் கூறும் கருத்து என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை : கொரோனா 4வது அலை உருவாக வாய்ப்பு இருப்பதாக கான்பூர் ஐஐடி கணித்துள்ள நிலையில், 4வது அலை எப்படி இருக்கும் ? மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மத்திய அரசின் நிதி அயோக் உறுப்பினரான ரூபா பாலன் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வூகான் மாகணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் அலையாக பரவிபெரும் அச்சுறுத்தல் மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. பின்னர்

கடந்த 2021 ஆம் ஆண்டு இரண்டாவது அலை அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளை ஏற்படுத்தியது, கொரோனா டெல்டா வகையால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டது. அடுத்த டெல்டா ப்ளஸ், ஓமிக்ரான், ஸ்ட்லெத் ஓமிக்ரான் என அடுத்தடுத்து கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு


இந்நிலையில் தற்போது இந்தியாவில் மூன்றாவது அலை குறைந்து வரும் நிலையில், நான்காவது அலை இந்தியாவில் ஜூன் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24 வரை தொடரும் என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போது கணித்துள்ளனர். கொரோனா நான்காவது அலை குறைந்தது நான்கு மாதங்கள் நீடிக்கும் என்று ஐஐடி கான்பூரின் ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். அவர்களின் கணிப்புகள், குறிப்பாக மூன்றாவது அலையைப் பற்றிய கணிப்புகள் துல்லியமானதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கான்பூர் ஐஐடி

கான்பூர் ஐஐடி

இந்நிலையில் கொரோனா 4வது அலை உருவாக வாய்ப்பு இருப்பதாக கான்பூர் ஐஐடி கணித்துள்ள நிலையில், 4வது அலை எப்படி இருக்கும் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மத்திய அரசின் நிதி அயோக் நிலைக்குழு உறுப்பினரான ரூபா பாலன் தெரிவித்துள்ளார். அமைதி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வரும் அவர் கூறுகையில், "கொரானா முதல் அலையின் முடிவில், பல உயிர்,பொருளாதார இழப்புகளை நாம் சந்தித்தாலும், அக்டோபர் 2020 முதல் மார்ச் 2021 வரை கிட்டதட்ட கொராணா முழுமையாக சென்றுவிட்டது போலத்தான் நமது மக்களின் வாழ்க்கை மாறியிருந்தது. இரண்டாம் அலை என்று ஒன்று வரும் எனவும் அது முன்பைவிட தீவரமாக மாறும் என கூறப்பட்ட கணிப்புகளை உணர்ந்து செயலாற்ற துவங்கிய பொழுது நாம் பல்லாயிரம் உயிர் இழப்புகளை சந்தித்திருந்தோம்.

நிச்சயம் இல்லை

நிச்சயம் இல்லை

அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளின் தொடர் விழிப்புணர்வு, தடுப்பூசி மையங்கள், முதல் இரண்டு அலைகளில் சந்தித்த பாதிப்புகளின் போது கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் மூன்றாம் அலை ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பையே உண்டாக்கியது. அதனால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். தொற்றுநோய் முடிந்துவிட்டதா? நிச்சயம் இல்லை.

என்ன செய்ய வேண்டும் ?

என்ன செய்ய வேண்டும் ?

எனவே கான்பூர் ஐஐடி ஆய்வில் கூறுவதுபோல நான்காவது அலை வந்தாலும் அதற்குப் பின் வந்தாலும் அல்லது வராமல் போனாலும் முகக்கவசம் சனிடைசர் பயன்படுத்துவதையும், நமது உற்றார், உறவினர், நண்பர்கள் என அனைவரையும் இரண்டு தடுப்பூசிகளையும், பூஸ்டர் தடுப்பு ஊசி போட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் தடுப்பூசி மற்றும் சமூக இடைவெளி நிச்சயம் ஒரு நாளைக்கு மூடை வரை எழுதும் என நிதி ஆயோக் குழு உறுப்பினரும் அமைதி அறக்கட்டளை தலைவருமான ரூபா பாலன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+