பெருகிய மேட்டூர் அணை.. 1 லட்சத்து 500 கனஅடி நீர் திறப்பு.. ஃபுல் அலர்ட் மோடில் காவிரி கரையோர மக்கள்!
சென்னை: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4வது நாளாக இன்று (ஜூலை 28) காலை 120 அடியாக நீடிக்கிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,00,500 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,00,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1.05 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
கடந்த மாதம் ஜூன் 29 ஆம் தேதி மாலையில், தனது உச்சபட்ச நீர்மட்டமான 120 அடியை எட்டி இந்த ஆண்டில் முதல் முறையாக நிரம்பியது. அதன்பிறகு மீண்டும் கடந்த 5 ஆம் தேதி, 20 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் மேட்டூர் அணை நிரம்பியது. இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து வெகுவாக அதிகரித்தது.
இதனால் மீண்டும் அணையின் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டியது நீர்மட்டம். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,00,500 கனஅடியாக உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,00,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18,000 கன அடி வீதமும் உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 82,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 400 கன அடியிலிருந்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
இந்நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1.05 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கோரிக்கையின்படி, அரக்கோணத்தில் இருந்து 60 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள், திருச்சி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரைப் பகுதியில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications