Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 மேட்டர்கள்.. நாள் குறிச்சாச்சு.. "திரு"வை தேடிய சசிகலா.. எம்ஜிஆர் சேரில் சாய்ந்து.. கலங்கிய அதிமுக

சசிகலா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்றைய தினம் எம்ஜிஆர் பிறந்த நாளை, அதிமுக மேலிடத்தைவிட, தினகரனை விட, சசிகலாதான் உற்சாகமாக கொண்டாடி உள்ளார்.. அது பற்றின முக்கிய செய்திகள் அதிமுக கூடாரத்தை அசைத்து பார்த்து வருகின்றன.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து, படங்களை அலங்கரித்து வைத்து மரியாதையும் செலுத்தினர் அதிமுகவினர்..

தமிழகம் முழுவதும் அவர் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினார்கள்... அந்த வகையில், சசிகலா தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் இருக்கும் எம்ஜிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்தார்.

சபதம்

சபதம்

அவர் மாலை அணிவிக்க வந்தபோது மழை கொட்டியது... ஆனாலும் அதை பொருட்படுத்தாது மழையில் நனைந்தபடியே வந்து மாலை அணிவித்து வணங்கினார்... பிறகு, அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசினார்.. "புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் புகழை என்றும் காப்போம், அவரது பிறந்தநாளான இன்று தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி அமைக்க சபதம் ஏற்போம்" என்றார்..

 டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

எனினும் நேற்றைய தினம் சசிகலா தரப்பில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளும் கசிந்துள்ளன.. வழக்கமாக சசிகலாவுடன் டிடிவி தினகரனும் வருவார்... ஆனால் நேற்று அவரது வீட்டிலேயே மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்.. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.. தன்னுடைய கட்சியை வழிநடத்துவார் என்று சசிகலாவை மலை போல நம்பி கொண்டிருந்த தினகரனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.. தன்கட்சிக்கு சித்தி வருவார் என்று பார்த்தால், கட்சியை பேசாமல் கலைத்துவிடு என்று சித்தி போட்ட உத்தரவில் தினகரன் அதிர்ச்சியும், அப்செட்டும் ஆகி விட்டதாக கூறப்பட்டது.

அமமுக

அமமுக

அப்போதிருந்தே இவர்கள் உறவில் லேசான விரிசல் என்றும், சசிகலா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு, அமமுக நிர்வாகிகள் யாரும் செல்லக்கூடாது என்று தினகரன் வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும்கூட செய்திகள் உலா வந்தன.. நேற்றைய தினம் இருவரும் தனித்தனியாக எம்ஜிஆர் பிறந்த நாளை கொண்டாடி இருப்பதை பார்த்தால், இந்த யூகங்கள் எல்லாம் உண்மைதானோ என்ற சந்தேகமும் எழுகிறது.

 ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

இரண்டாவதாக, சசிகலா நேற்று நடத்திய ஆலோசனை கூட்டம் முக்கிய கவனத்தை ஈர்த்து வருகிறது.. எம்ஜிஆர் நினைவு இல்லத்தில், ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்.. எம்ஜிஆர் ரூமுக்குள் நுழைந்த சசிகலாவை, அவரது ஆதரவாளர்கள் நீலாங்கரை முனுசாமி, தி.நகர் வைத்தியநாதன், எம்ஜிஆரின் பேரன் குமார் ராஜேந்திரன் ஆகியோர் அழைத்து சென்றிருக்கிறார்கள்.. அங்கு எம்ஜிஆர் உட்காரும் நாற்காலியில் சசிகலாவை உட்காரும்படி சொல்லி இருக்கிறார்கள்.. அதற்கு சசிகலாவோ, ''தலைவர் உட்கார்ந்த சேரில் நான் உட்கார விரும்பவில்லை, வேற சேர் கொண்டு வாங்க" என்றாராம்

 எம்ஜிஆர் சேர்

எம்ஜிஆர் சேர்

ஆனால், ஆதரவாளர்கள் வலியுறுத்திய பிறகு, எம்ஜிஆரின் சேரில் சசிகலா உட்கார்ந்துள்ளார்.. அப்போது நிர்வாகிகளிடம், கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் தனயிக ஆலோசனை நடத்தினாராம் சசிகலா.. "வரும் 21ம் தேதிக்கு பிறகு நல்ல சேதி வரும்.. தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் போகலாம் என்று திட்டமிட்டிருந்தேன். கொரோனா பரவலால் ரத்து செய்யும்படி ஆகிவிட்டது.. அனைவரும் ஒருங்கிணையும் நேரம் வந்துவிட்டது; மறுபடியும் அதிமுக ஆட்சி மலரும்" என்று தெரிவித்துள்ளார்.

 திரு - சசி

திரு - சசி

மூன்றாவதாக, சசிகலாவை சந்திக்க முக்கிய நபர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. தி.நகரிலுள்ள எம்ஜிஆர் இல்லத்துக்கு மாலை அணிவிக்க காங்கிரஸ் திருநாவுக்கரசு வருவதாக எம்ஜிஆர் வாரிசுகளில் ஒருவரான குமார் ராஜேந்திரனிடம் 2 நாட்களுக்கு முன்பு சொல்லப்பட்டது. அவரும் இந்த தகவலை சசிகலாவிடம் தெரிவித்திருக்கிறார்... திருநாவுக்கரசு வரும் பட்சத்தில் திரு-சசியை சந்திக்க வைக்க திட்டமிட்டிருந்தனர். அந்த சந்திப்பை சசிகலாவும் விரும்பினார்.

 திருநாவுக்கரசு

திருநாவுக்கரசு

இந்த நிலையில், நேற்று எம்ஜிஆர் இல்லம் வந்த சசிகலா, திருநாவுக்கரசு வருகிறாரா? என்று விசாரித்துள்ளார். அப்போது, கொரோனா கட்டுப்பாடுகளால் எம்ஜிஆர் இல்லம் வருவது சந்தேகம் தான் என சசிகலாவுக்கு சொல்லப்பட, திருநாவுக்கரசுக்காக காத்திருக்காமல் கிளம்பி விட்டாராம் சசிகலா.. மதியம் 12:30 வரை திருநாவுக்கரசு வரவில்லை.. கொரோனா கட்டுப்பாடுகளால், வீட்டிலேயே எம்ஜிஆர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டார் திருநாவுக்கரசு என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.. அதனால் சசிகலாவும் உடனே கிளம்பி சென்றுவிட்டார்.. எனினும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இந்த சந்திப்பு நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

 அதிமுக

அதிமுக

நேற்றைய தினம் கொட்டும் மழையில் சசிகலா வந்த நிலையில், தினகரன் தனியாக எம்ஜிஆர் பிறந்த நாளை கொண்டாடியதும், எம்ஜிஆர் சேரில் சசிகலா உட்கார்ந்து ஆலோசனை நடத்தியதும், திருநாவுக்கரசை சந்திக்க ஆவலாய் இருந்ததும், என நேற்றைய தினம் முழுக்க பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. சசிகலாவின் இந்த ஒருநாள் நிகழ்வுகளை, அதிமுக மேலிடம் அப்படியே வாயடைத்து போய் பார்த்து கொண்டிருக்கிறதாம்....!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+