வெளியேறினாரா நமிதா?..வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி கொடுக்கிறாரா ஷகிலா மகள் மிலா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில தவிர்க்க முடியாத காரணத்தினால் நமிதா மாரிமுத்து அவராகவே வெளியேறிவிட்டதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் நமிதாவுக்கு பதில் மற்றொரு திருநங்கையான மிலா (குக் வித் கோமாளி ஷகிலாவின் வளர்ப்பு மகள்) வைல்ட் கார்டு என்ட்ரியில் வருவாரா என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் முறையாக நமிதா மாரிமுத்து என்ற திருநங்கையர் ஒருவர் கலந்து கொண்டார். அவர் படங்களில் நடித்தவர், மாடலிங்கில் உள்ளார். மேலும் அவர் பல அழகி பட்டங்களையும் பெற்றார்.

அவர் கடந்து வந்த பாதை டாஸ்க்கில் கூறிய கதையை கேட்ட ரசிகர்கள் நமிதாதான் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல வேண்டும் என பரவலாக பேசி வந்தனர்.

சாதனை

சாதனை

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் திருநங்கை என்ற சாதனையை போல் முதல் திருநங்கை வெற்றியாளர் என சாதனை படைக்க வேண்டும் என அவரது கதையை கேட்ட ரசிகர்கள் வாழ்த்தினர். இந்த நிலையில் கமல்ஹாசன் பங்கேற்கும் நிகழ்ச்சியின் ப்ரோமோ இன்று வெளியானது.

Recommended Video

    Bigg Boss வீட்ல Namitha Marimuthu எல்லாருக்குமே Toughஆ இருப்பா| Transgender Jaya Exclusive Interview
    17 பேர்தான்

    17 பேர்தான்

    அதில் மொத்தமுள்ள 18 போட்டியாளர்களில் 17 பேர் மட்டுமே உள்ளனர். ஒருவர் மிஸ்ஸாகியுள்ளார். யார் என்று பார்த்தால் நமிதா மாரிமுத்து. இவர் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டதாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

    நமிதாவை காணவில்லை

    நமிதாவை காணவில்லை

    எலிமினேஷனும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிலையில் சனிக்கிழமையே நமிதாவை காணவில்லை என்பதால் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கவலை தெரிவிக்கிறார்கள். நமிதா மாரிமுத்துவுக்கு பதில் மற்றொரு திருநங்கையான மிலா கலந்து கொள்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    பிக்பாஸ் நிகழ்ச்சி

    பிக்பாஸ் நிகழ்ச்சி

    இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கையான மிலாதான் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அக்டோபர் 3ஆம் தேதி போட்டியாளர்கள் அறிமுகத்தின் போது மற்றொரு திருநங்கையான நமிதா மாரிமுத்து பங்கேற்றார். மிலா அந்த போட்டியில் இல்லை. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முதல்முறையாக ஒரு திருநங்கையை போட்டியாளராக எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    நமிதா மாரிமுத்து

    நமிதா மாரிமுத்து

    அப்போது மிலா, நமிதா மாரிமுத்து ஆகிய இருவரில் யார் சிறந்தவர்கள் என விஜய் டிவி நிர்வாகம் ஆய்வு செய்தது. அதில் இருவரும் பல தரப்பு கஷ்டங்களை அடைந்திருந்தாலும் நமிதா மிகவும் போராடி அழகிப் பட்டங்களை பெற்றதும் மிலாவை விட நமிதாவே சிறந்த தேர்வு என முடிவு செய்து நமிதா அழைக்கப்பட்டார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+