திமுக ஆட்சியில் காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது? கனிமொழிக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கடந்த திமுக ஆட்சியில் காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது என்பதை திமுகவின் கனிமொழி தெளிவுபடுத்த வேண்டும்" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன், சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன், காவல்துறை அதிகாரிகள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Minister Aadhav Arjuna Challenges Kanimozhi to Clarify Police Control Under Previous DMK Regime

இந்த கூட்டத்தில், வடிகால் அமைப்புகளை மேம்படுத்துவது, மழைக்காலங்களில் மின்சாரம் சார்ந்த பணிகளை முன்னெச்சரிக்கையுடன் மேற்கொள்வது, பெருநகர சென்னை மாநகராட்சி - குடிநீர் வாரியம் - மின்சார வாரியம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. திமுக மகளிரணி நடத்திய போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "கடந்த ஆட்சியில் காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது என்பதை கனிமொழி தெளிவுபடுத்த வேண்டும். முதலமைச்சர், துணை முதலமைச்சர் அல்லது முதலமைச்சரின் மருமகன் என யார் காவல்துறையை கட்டுப்படுத்தினார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்.

உதயநிதி ஸ்டாலினின் ஆதரவில் இருந்த ரத்தீஷ், தமிழ்நாட்டில் உள்ள காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல்துறையை ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவற்றையெல்லாம் தற்போது முதலமைச்சர் சீரமைத்து வருகிறார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் இரண்டு வீடியோக்களை வெளியிட்டு எங்களை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். தேர்தலில் தாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள், இன்னும் அதே கனவில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பெரிய பிரச்சனைகள் நடைபெறுவதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கி, மக்களிடம் எங்கள் மீது கெட்ட பெயரை ஏற்படுத்திவிடலாம் என நினைக்கிறார்கள்.

ஆனால், நாங்கள் மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். முதலமைச்சர் பேசுவதை விட செயல்பாடுகள் மூலம் நிரூபித்து வருகிறார். ஊழல் இல்லாமல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக தலைவர் எத்தனை வீடியோக்களை வெளியிட்டு விமர்சித்தாலும், முதலமைச்சர் தலைமையிலான அரசு மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான திட்டங்களை செயல்படுத்துவதிலேயே கவனம் செலுத்தி வருகிறது" எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+