தமிழ்நாட்டில் விரைவில் பள்ளிகள் திறப்பு? எப்போது அறிவிப்பு வெளியாகும்..அமைச்சர் அன்பில் மகேஷ் பளிச்
சென்னை: பெற்றோர்கள் மத்தியில் பயம் குறைந்த பின்னர், மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகே தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்,
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க ஏதுவாக தமிழ்நாடு அரசுக் கல்வி தொலைக்காட்சியை நடத்தி வருகிறது.

அமைச்சர் அன்பில் மகேஷ்
இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், விரைவில் பள்ளிகள் திறக்கப்படலாம் எனத் தகவல் பரவியது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். இன்று திருச்சியில் அறநிலையத் துறை கீழ் இயங்கும் பூசாரிகள், அர்ச்சகர்கள் ஆகியோருக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

+2 மாணவர்கள்
இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு அர்ச்சகர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார், அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "+ 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டோம். அதன்படி +2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு வெளியிடப்படும்.

ஐசிஎம்ஆர்
இப்போது கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா 3ஆம் அலை விரைவில் ஏற்படலாம் என்றும் அதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். எனவே ஐசிஎம்ஆர், உலக சுகாதார அமைப்பு ஆகியவை பள்ளிகள் திறப்பு குறித்து வெளியிடும் பரிந்துரைகளை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.

கட்டுக்குள் வந்த பிறகே பள்ளிகள் திறப்பு
அதன் பிறகு முதல்வரின் ஒப்புதலுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்ட போதிலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் அனுப்பவே அச்சப்படுகிறார்கள். எனவே,கொரோனா முற்றிலுமாக கட்டுக்குள் வந்த பிறகே தீவிர ஆலோசனைக்குப் பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்" என்று கூறினார். கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் நேற்று மாநிலத்தில் 5,415 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications