இப்படிதான் செய்யனும்.. அதிகாரிகளுக்கு ஆர்டர் போட்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் - நீளும் லிஸ்டு
சென்னை: தொழிலாளர் நலத்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்களை அமைச்சர் சிவி கணேசன் வழங்கி இருக்கிறார்.
சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலத்தில், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கருத்தரங்கு கூடத்தில் தொழிலாளர் துறை சார்ந்த அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வெ. கணேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த அரசானது, தொழிலாளர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் வகையிலும், அனைத்து பிரச்சனைகளுக்கு முழுமையாக தீர்வு காணும் நோக்கத்திலும் செயல்படும் அரசாக இருந்து வருகிறது. அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தொழிலாளர்களுக்கு புதிய நலத்திட்டங்களை அறிவித்து தொழிலாளர்களின் நலன் மற்றும் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது." என்றார்.
அதை தொடர்ந்து முக்கிய அறிவுறுத்தல்களை அமைச்சர் வழங்கினார். அதில், "தொழிலாளர் துறை அலுவலர்கள் அமைப்புசாரா வாரியங்களில் பெறப்படும் கேட்புமனுக்களின் மீது உடனுக்குடன் தீர்வு காணவும், நிலுவை ஏதுமின்றி செயல்படவும். பதிவு புதுப்பித்தலிலும் நிலுவை இன்றி விரைந்து செயல்படவும் வேண்டும்.
தொழிலாளர் துறையின் செயல்பாடுகளான சமரசப் பணிகள், நீதிசார் பணிகள். சட்ட அமலாக்க பணிகள் நிலுவையில் உள்ள வழக்குகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். போன்ற பணிகள் தொடர்பான விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழில் தகராறுகள் சட்டம். 1947. தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947, குறைந்தபட்ச ஊதிய சட்டம், 1948, பணிக்கொடை பட்டுவாடா சட்டம், 1972, தோட்டத் தொழிலாளர்கள் சட்டம், 1951. சட்டமுறை எடையளவு சட்டம், 2009 மற்றும் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பல்வேறு தொழிலாளர் நல சட்ட அமலாக்க பணிகளை துறை அலுவலர்கள் புகார்களுக்கு இடமளிக்காமல் மேற்கொள்ள வேண்டும். அமலாக்க அலுவலர்கள் ஆய்வின் சமயம் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உரிய காலத்தில் வழங்கப்படுகிறதா என்பதனை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், ஆய்வின் போது வெளிமாநில தொழிலாளர்கள், தொழிலாளர் துறையின் வலைதளத்தில் தங்களின் விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளார்களா என்பதனை உறுதி செய்ய வேண்டும்.
31.03.2023 அன்று மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கென மாநில அளவிலான ஆலோசனை குழு மற்றும் மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாநில மற்றும் மண்டல அளவிலான குழு கூட்டங்களை நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளிக்குள் நடத்த வேண்டும்.
சமரச அலுவலர்கள் நாட்டில் தொழில் வளர்ச்சி மேம்படுத்தப்படுவதோடு. தொழிலாளர் நலன் பாதுகாக்கும் வகையிலும் தொழிலாளர் மற்றும் வேலையளிப்போர் இடையே நல்லுறவினை மேம்படுத்தும் வகையிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்." என்று பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications