அடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான்...திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 21 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி தான் நடைபெறும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பொறுத்தவரை அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வம்பில் மாட்டிக்கொள்வது வழக்கம். மனிதர் வெள்ளந்தியாக பேசினாரா..இல்லை சூதுவாதோடு பேசினாரா என அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் செய்தியாளர்கள் தரப்பில் பட்டிமன்றமே நடைபெறும்.

அம்மா இட்லி சாப்பிடவில்லை எனத் தொடங்கி பாமக சின்னம் ஆப்பிளுக்கு ஓட்டுப்போடுங்க என்றது வரை ஊடகத்திலும், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. கூட்டணிக்கட்சியான பாமகவின் சின்னம் மாம்பழம் என்பதை கூட மறந்து ஆப்பிள் எனச் சொன்னார். இப்படி இவர் பேசியதை ஒரு பெரிய லிஸ்டே தயார் செய்யலாம்.
இந்நிலையில், மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவின் இரட்டை குழல் துப்பாக்கி எனக் கூறியதோடு, தமிழகத்தில் அடுத்த 21 ஆண்டுகளுக்கு எங்கள் ஆட்சி தான் என அடித்துக் கூறினார். அதிமுகவை ஆட்டிவிடலாம், அசைத்துவிடலாம் என பல பேர் முயற்சி செய்ததாகவும், அது பலிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
டீக்கடை நடத்தி கடின உழைப்பால் அரசியலில் உயர்வுக்கு வந்தவர் ஓ.பி.எஸ்.என்றும், இதேபோல் விவசாய குடும்பத்தை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியும் அரசியலில் அயராத உழைப்பால் முதல்வரானவர் எனவும் தெரிவித்தார். ஆட்சி நிர்வாகத்தை பற்றி இவர்களுக்கு என்னத் தெரியப்போகிறது என நினைத்தவர்கள் தான் இப்போது ஏமாற்றம் அடைந்துள்ளதாக பேசினார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications