பொதுப்பணித்துறை மானிய கோரிக்கை! 1,000 பேருக்கு அறுசுவை அசைவ விருந்து! அமைச்சர் எ.வ.வேலு தடபுடல்!
சென்னை: பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று நடைபெறும் நிலையில் 1,000 பேருக்கு மதியம் அறுசுவை அசைவ விருந்து கொடுக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.
சைவம், அசைவம் என இரண்டு விதமான உணவுகளுக்கும் ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் எவ வேலு சட்டசபை அலுவலர்கள், ஊழியர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ள கட்சிக்காரர்கள் என பல தரப்பட்டோருக்கும் இந்த விருந்தை கொடுக்கிறார்.
எதிலுமே பிரம்மாண்டத்தை காட்டக் கூடிய அமைச்சர் எவ வேலு, உணவு விஷயத்திலும் தடபுடல் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்.

மானியக் கோரிக்கை
தமிழக சட்டசபையின் 10வது நாள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் அமைச்சர் எவ வேலு. இந்நிலையில் அமைச்சர் எவ வேலுவின் சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் இருந்து வண்டி வண்டியாக கட்சிக்காரர்கள் இன்று காலையில் சென்னையில் குவிந்துவிட்டனர்.

வாழ்த்து மழை
அமைச்சரின் இல்லத்தில் திரண்டு அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். இதனிடையே ஆண்டுக்கு ஒரு முறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவதால் அமைச்சர்களை அவர்களின் சொந்த மாவட்டக் கட்சியினர், ஆதரவாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவது வழக்கம். அவ்வாறு வாழ்த்துக் கூற வந்தவர்களை வயிராற சாப்பாடு போட்டு அனுப்புவது மூத்த அமைச்சர்களின் வழக்கம்.

சீனியர் அமைச்சர்
அந்த வகையில் சீனியர் அமைச்சரான எவ வேலு, இன்று மதியம் 1,000 பேர் சாப்பிடும் வகையில் சைவம், அசைவம் என இரண்டு விதமான உணவுகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இன்னைக்கு ஒரு புடி என்ற வில்லேஜ் குக்கிங் சேனல் வசனத்தை போல் திருவண்ணாமலை மாவட்ட திமுகவினர் அமைச்சர் எவ வேலு அளித்த விருந்தை என்ஜாய் செய்து சாப்பிடவுள்ளார்கள். கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்லாமல் சட்டசபை அலுவலர்கள், ஊழியர்கள், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஸ்டாஃப்களுக்கும் மதிய உணவு வழங்குகிறார் எவ வேலு.

தடபுடல் ஏற்பாடு
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தான் 10 லட்சம் ரூபாய் செலவு செய்து 1,000 கிலோ மேட்டூர் டேம் மீன்களை சென்னைக்கு கொண்டு வந்து சமைத்து சட்டசபை வளாகத்தில் மணக்க மணக்க விருந்து வைத்தார் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம். இதனிடையே எதிலுமே பிரம்மாண்டத்தை காட்டக் கூடிய அமைச்சர் எவ வேலு, உணவு விஷயத்திலும் தடபுடல் ஏற்பாடுகள் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications