முதலமைச்சரின் பி.ஆர்.ஓ நான்தான்.. ஸ்டாலின் சொன்னது கரெக்ட் - அமைச்சர் ஜெயக்குமார் 'பளிச்'
சென்னை: ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் 7-வது நாளாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பழைய வண்ணாரப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய பின்னர் சைக்கிள் ரிக்ஷாவில் அமர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் பகுதியில் நடந்து சென்றும் குழந்தைகளை தூக்கி கொஞ்சியபடியே பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்தும், மலர்களை தூவியும் ஆரத்தி எடுத்தவாறும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், சிறுபான்மை மக்களின் ஆதரவு அதிமுக விற்கு அதிகமாக உள்ளது என்றார். மேலும், முதலமைச்சரின் பி.ஆர்.ஓ அமைச்சர் ஜெயக்குமார் என ஸ்டாலின் கூறியதற்கு நான் பெருமைப்படுகிறேன்.
அப்படியெனில், அரசின் திட்டங்களை தான் நான் மக்களிடம் கொண்டு சேர்க்கிறேன் என்று அர்த்தம் என்றார். மேலும், இலங்கையில் இனப் படுகொலைக்கு திமுக தான் காரணம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
முன்னதாக அவர், எம் ஜி ஆரின் 'வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்' பாடலை முழுவதுமாக பாடி அசத்தினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications