சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதலமைச்சரை பாராட்ட மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை... குறைகூறுவதே தலையாய பணி -அமைச்சர் காமராஜ்

Google Oneindia Tamil News

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்ட மனமில்லாதவர் மு.க.ஸ்டாலின் என்றும், குறைகூறுவதையே தலையாய பணியாக கொண்டுள்ளார் எனவும் அமைச்சர் காமராஜ் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இது வரை இல்லாத அளவில் பல்வேறு நீர் மேலாண்மை சிறப்புத் திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

 கணவரை இழந்த பெண்கள் டார்கெட்.. வீடியோவை காட்டி மிரட்டி,மிரட்டியே நாசமாக்கிய கும்பல்.. அதிரும் சேலம் கணவரை இழந்த பெண்கள் டார்கெட்.. வீடியோவை காட்டி மிரட்டி,மிரட்டியே நாசமாக்கிய கும்பல்.. அதிரும் சேலம்

தீர்வுகள்

தீர்வுகள்

குடிமராமத்துத் திட்டம், விவசாயிகளுக்கு இலவச வண்டல் மண் வழங்கும் திட்டம், டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டம் மற்றும் மாநிலத்திலுள்ள பல்வேறு நதிகளின் கட்டமைப்புக்களை சீரமைத்தல் போன்ற பல திட்டங்களை, தானே ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளின் தேவைகளை முழுமையாக உணர்ந்து, முதல்வர் செயல்படுத்தி வருகிறார். பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த காவிரி நதிநீர் பிரச்சினைக்கு சட்டப்போராட்டத்தின் மூலம் தீர்வு கண்டவர் முதல்வர்.

குறை கூறுவது புதிதல்ல

குறை கூறுவது புதிதல்ல

எந்தப் பிரச்சினைகளுக்கும் ஆக்கப்பூர்வமான கருத்துகளை தெரிவிக்காமல், அரசின் மீது ஏதாவது குறை கூறிக் கொண்டிருப்பதையே தனது வழக்கமான பணியாக வைத்திருக்கும் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது டெல்டா மாவட்டங்களில் தூர்வரும் பணிகள் குறித்து அரசின் மீது குறைகளை கூறுவது ஒன்றும் புதிதல்ல.

டெல்டா மாவட்டங்கள்

டெல்டா மாவட்டங்கள்

மேலும், பல்வேறு நீர் மேலாண்மைத் திட்டங்களையும் திறம்பட செய்ததன் காரணமாகத் தான் கடந்த ஆண்டு 7 லட்சம் ஏக்கர் நிலங்களில் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டது. இதை பாராட்ட மனமில்லாத ஸ்டாலின் தற்போது டெல்டா மாவட்டங்களில் உரிய காலத்தில் தூர்வாரப்படுமா என்று கேள்வி எழுப்புவது விந்தையாக உள்ளது.

விவசாயம் செழித்தோங்குகிறது

விவசாயம் செழித்தோங்குகிறது

கடந்த 4 ஆண்டுகளில் பொதுப்பணித் துறை மூலமாக மட்டுமே பல்வேறு திட்டங்களில் ஆயிரக்கணக்கான குளங்கள் மற்றும் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன.இதன் காரணமாகவே, சென்ற வருடம் கிடைக்கப் பெற்ற மழை நீர் கூடுதலாக சேமிக்கப்பட்டு, நீர் ஆதாரம் பெருகியதன் காரணமாகவே, வேளாண்மை தழைத்தோங்கியது, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படவில்லை.

குறுவை சாகுபடி

குறுவை சாகுபடி


ஏரிகள், கால்வாய்கள் மற்றும் நீர் தேக்கங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் மட்பாண்டங்கள் செய்பவர்களுக்கு விலை இல்லாமல் வழங்கும் ஒரு சிறப்பான திட்டமும் முதல்வரால் அறிவிக்கப்பட்டு இதுவரை 6 லட்சத்து 68 ஆயிரத்து 39 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.
முதல்வர், வழக்கமான ஜுன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படுமென்று அறிவித்ததன் மூலம், லட்சக்கணக்கான டெல்டா விவசாயிகளின் மனதில் பால் வார்த்து உள்ளார்.

விரைந்து பணிகள்

விரைந்து பணிகள்

எனவே, டெல்டா பகுதிகளிலுள்ள ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களை சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 392 பணிகள் ரூ.67.248 கோடி மதிப்பீட்டில், பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி, போர்க்கால அடிப்படையில் இப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 3,457 கி.மீ. வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் ஆறுகளில் தூர்வாரும் பணிகளை மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பதற்கு முன்னரே முடிப்பதற்கு முதல்வர் ஆணையிட்டு அதன் அடிப்படையில் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

English summary
minister kamaraj criticize dmk president mk stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X