முதியோர் பென்சன் நிறுத்தம்? "வழக்கமான ஒன்றுதான்.." அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பரபர விளக்கம்
சென்னை: முதியோர் பென்ஷன் சிலருக்கு நிறுத்தப்பட்டு உள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்து உள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியும் வருவாய்த்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
அருப்புக்கோட்டையில் இருக்கும் தனியார் மண்டபத்தில் சமூக நலன், மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், 150 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருட்களையும் வளைகாப்பு பொருட்களும் கொடுத்தார்.

நிகழ்ச்சிகள்
அதைத் தொடர்ந்து வருவாய்த்துறை சார்பிலும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் 141 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மேலும், முதியோர் ஓய்வூதியம், மின்னணு குடும்ப அட்டை, ஆதரவற்ற விதவை நிவாரண உதவித் தொகை ரூ 20,29,660 உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அளித்தார்.

மனநலன் முக்கியம்
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "வளைகாப்பு நடத்த முடியாத பெண்களுக்கு வீட்டின் மூத்த சகோதரனாக இருந்து முதல்வர் வளைகாப்பு நடத்துகிறார்.. தமிழ்நாட்டில் பிரச்சினையில்லாத வீடுகள் என்று எதுவும் இல்லை. ஆனால், பிரச்சினையைத் தள்ளிவிட்டு பிரசவ காலத்தில் நல்ல மனநலத்துடன் இருக்க வேண்டும். அப்போது குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும்.

திமுக ஆட்சி
ஆண் குழந்தைகள், பெண்கள் குழந்தைகள் என இரண்டுமே ஒன்று தான். குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் கவலை வேண்டாம்.. பெண்கள் தான் அனைத்து போட்டிகளிலும் வெல்கிறார்கள்.. எந்த குழந்தையாக இருந்தாலும் அது நம்முடைய குழந்தைகள் தான். அனைத்து மக்களின் நலனுக்காகவே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். எல்லோருக்கும் எல்லாம் வழங்கக்கூடிய ஆட்சி தான் திமுக ஆட்சி!

முதியோர் பென்ஷன்
இதுவரை முதியோர் பென்ஷன் 4,92,000 பேருக்குக் கொடுத்து இருக்கிறோம். முதியோர் பென்சன் வாங்கும் நபர்கள் சிலரை நீக்கி உள்ளதாகக் கேட்கிறீர்கள். அனைத்து ஆட்சியிலும் தகுதி இல்லாதவர்களை நீக்கம் செய்வது வழக்கமான ஒன்றுதான்.. தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஓய்வூதியதாரர்கள் விண்ணப்பித்தால்.. மீண்டும் ஆய்வு செய்து தகுதியுடைய அனைவருக்கும் மீண்டும் ஓய்வூதியம் வழங்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
-
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது?












Click it and Unblock the Notifications