"இன்னும் ஒரே மாதம்.. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவடையும்!" கே.என்.நேரு நம்பிக்கை
சென்னை: வரும் செப். மாதம் பருவமழை தொடங்கும் முன்பு சென்னையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க உத்தரவிட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார் தற்போது சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், மீதமுள்ள பணிகளும் அடுத்த ஒரு மாதத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சென்னையில் மழை பெய்தாலே சாலைகளில் மழை நீர் தேங்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் உட்பட அனைவருமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக நிலைமை சற்று மேம்பட்டது. இருப்பினும், கடந்தாண்டு பெய்த கனமழையால் மொத்த சென்னையிலும் நீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதுபோல நிகழாமல் இருக்கத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆலோசனைக் கூட்டம்: இன்றைய தினம் சென்னை, கலைவாணர் அரங்கில் மாநகராட்சிகள், நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்குக் கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சர் நேரு, நீர்நிலைகளில் காணப்படும் ஆகாயத் தாமரையை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அமைச்சர் நேரு: அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, "சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் ஏற்கனவே 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. மற்ற பணிகளையும் அடுத்த ஒரு மாதத்தில் முடிக்க உத்தரவிட்டுள்ளோம்.
அதேநேரம் கொசஸ்தலை ஆறு குறித்து பணிகள் முடிக்க இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது.. இப்போது வரை கொசஸ்தலை ஆறு தொடர்பான பணிகள் 80 சதவீதம் வரை முடிக்கப்பட்டு இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
நடவடிக்கை: மேலும், மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மெட்ரோ ரயிலுக்காகத் தோண்டிய பள்ளத்தில் உள்ள தண்ணீரை எடுக்கும் பணிகளை மெட்ரோ நிர்வாகமே கையாண்டு வருவதாகத் தெரிவித்த அவர், தேவையான இடங்களில் மோட்டார்கள் வைத்தும் அகற்றப்படும் என்றும் இதற்காக மோட்டர்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும். செப் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இப்போது தான் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் நல்ல மழை இருக்கும். இந்த வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு, அதாவது செப்டம்பர் மாதம் முன்பே அனைத்து பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications