இனி அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் வேக்சின் போடலாம்..சூப்பர் திட்டத்தை அறிவித்த அமைச்சர் மா.சு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் 24 மணி நேரமும் வேக்சின் போடும் பணிகள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக 24 மணி நேரமும் இயங்கும் வேக்சின் மையத்தைச் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
அப்போது அமெரிக்கா வாழ் தமிழர்களின் அறக்கட்டளை சார்பில் ரூ. 2.36 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களையும் அமைச்சர் மா சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

Array
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அமெரிக்கா வாழ் தமிழர்கள் சார்பில் ரூ. 2.36 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவை விரைவில் 15 அரசு மருத்துவமனைகளுக்குப் பிரித்து அனுப்பப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல அரியலூர் மாவட்டத்தில் 100% அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது.

24 மணி நேர வேக்சின்
இப்போது சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 24 மணி நேரமும் வேக்சின் போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். நாளை (ஆகஸ்ட் 23) முதல் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் கொரோனா வேக்சின் போடும் பணிகள் நடைபெறும்.

புளியந்தோப்பு குடிசை மாற்றுவாரியம்
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் கொரோனா நோயாளிகளைத் தங்க வைத்ததாலேயே கட்டடம் பலவீனமானது என்று வினோதமான விளக்கத்தைக் கட்டுமான நிறுவனத்தினர் கொடுத்துள்ளார். இது போகாத ஊருக்கு வழி சொல்வது போல் உள்ளது.
Recommended Video

வேடிக்கை விளக்கம்
தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளிலும் கொரோனா மையம் ஏற்படுத்தப்பட்டு, கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அங்கெல்லாம் எந்தவொரு சேதாரமும் ஏற்படாத நிலையில், புளியந்தோப்பில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மட்டும் அதனால் சேதமடைந்ததாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications