'ஒன்னும் சரிப்பட்டு வராது..'நாமே நேரா போய் மீட் பண்ணிட வேண்டியதுதான்.. திடீரென டெல்லி செல்லும் மா.சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாத நிலையில், வரும் வியாழக்கிழமை இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் வேக்சின் பணிகளை மாநில அரசு வேகப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் மத்தியிலும் கொரோனா வேக்சின் பற்றிய நம்பிக்கை அதிகரித்துள்ளதால், பல மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகாலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நிற்கின்றனர்.

வேக்சின் பற்றாக்குறை

வேக்சின் பற்றாக்குறை

இருப்பினும், மாநிலத்தில் நிலவும் வேக்சின் பற்றாக்குறை காரணமாகத் தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வேக்சின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், முதல் டோஸ் வேக்சின் எடுத்துக் கொண்டவர்களுக்கும் சரியான நேரத்தில் இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டெல்லி பயணம்

டெல்லி பயணம்

இந்நிலையில், இன்று கிண்டி கிங் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் இப்போது கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. இதனால் வேக்சின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்திற்குக் கூடுதலாக வேக்சின் அளிப்பது தொடர்பாக வரும் வியாழக்கிழமை (ஜூலை 8) டெல்லி சென்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசுகிறோம்.

அதிமுகவுக்கு அழைப்பு

அதிமுகவுக்கு அழைப்பு

இதற்காக நானும், செயலாளர் ராதாகிருஷ்ணனும் டெல்லி செல்கிறோம். மாநிலத்தில் நடைபெறும் தடுப்பூசி பணிகள் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர். அப்படிக் குறை சொல்லும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் எங்களுடன் வரலாம். உங்கள் கூட்டணி தலைவர்கள் தானே மத்திய அரசில் இருக்கிறார்கள். நீங்களும் வந்து பேசி கூடுதல் தடுப்பூசிகளைப் பெற்றுத் தந்தால் அனைவருக்கும் நல்லது தான்.

தடுப்பூசி வீண்

தடுப்பூசி வீண்

அதிமுக ஆட்சியில் நான்கு லட்சம் தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் மத்திய அரசு அனுப்பிய வேக்சின்களை காட்டிலும் கூடுதலாக 1.5 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது ஒரு குப்பியில் வேஸ்டேஜ்யைும் கணக்கிட்டு 16-24% வரை கூடுதலாக மருந்தை அனுப்புவார்கள். வேஸ்டேஜ்கள் பூஜ்ஜியம் ஆக்கப்பட்டதால் அதிக நபர்களுக்கு வேக்சின் போட முடிகிறது" என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+