சுகாதாரமற்ற நிலை.. நோயாளிகளிடம் மோசமான நடத்தை.. ஆர்.எம்.ஓவை சஸ்பெண்ட் செய்த அமைச்சர்
சென்னை: சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கு வரும் நோயாளிகளிடம் மோசமாக நடந்து கொண்டதாக வந்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரியை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனை வட சென்னையில் உள்ள முக்கியமான மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனை ஆகும். சென்னையில் உள்ள முக்கியமான மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று.
இங்கு மகப்பேறு பிரிவிற்கான பிரத்யேமாக பல்வேறு வசதிகள் உள்ளன. இதனால் வடசென்னை மக்கள் பிரசவத்திற்கு இங்கு தான் பிரதானமாக வருகிறார்கள். தினமும் ஏராளமான பெண்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

லஞ்சம்
இந்த மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் நோயாளிகளிடம் மோசமாக நடந்து கொள்வதாகவும், லஞ்சம் கேட்டு வற்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன. அண்மையில் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுடன் மோதல்களும் நடந்தன. பணம் இல்லாமல் எதுவும் நடக்காது என்கிற அளவிற்கு ஊழியர்கள் சிலர் நடந்து கொண்டதாக புகார்கள் பறந்தன. ஒவ்வொரு விஷயத்திற்கு ஒரு ரேட் என்கிற அடிப்படையில் பணம் கேட்டு வற்புறுத்துவதாகவும், சுகாதார சீட்கேடுடன் மருத்துவமனை இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

மா. சுப்பிரமணியன்
இதையடுத்து ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு இன்று திடீரென சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அங்கு ஆய்வு மேற்கொண்டு , அதிகாரிகளிடமும், பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். அத்துடன் அங்கிருந்த நோயாளிகளிடம் விசாரணை நடத்தினார்.

விளக்கம்
இறுதியாக மருத்துவமனையை சுற்றிபார்த்த அமைச்சர் மா சுப்பிரமணியன், சரியான பராமரிப்பின்றியும் சுகாதார சீர்கேடு அடைந்து காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் வெங்கடேஸ்வரி அவர்களிடம் விளக்கம் கேட்டார்.

அதிரடி
இதனிடையே சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதனிடையே மருத்துவமனையை சரியாக பராமரிக்காமலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் இடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதற்கான புகார்களை நோயாளிகள் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் மா சுப்பிரமணியன் உடனடியாக மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரியை தற்காலிக பணிநீக்கம் செய்ய மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications