துன்பம் தரும் பாஜகவுடன் நிதிஷ்.. இந்தியா கூட்டணிக்கு நல்லதே! பீகார்தான் பாவம் -அமைச்சர் மனோ தங்கராஜ்
சென்னை: ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் பிரிந்தது இந்தியா கூட்டணிக்கு நல்லதுதான் என்றும், ஆனால், பீகார் மக்களை நினைத்தால் வருத்தமாக இருப்பதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டு இருப்பதாவது,
"நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும் - திருக்குறள்

நண்பர் போல நல்லவற்றைச் சொன்னாலும் பொருந்தாதவர் சொற்கள் உடனே தெரிந்து விடும்
நேற்றைய தினம் முழுக்க பாஜகவின் ஊதுகுழலாக செயல்படும் சில செய்தி ஊடகங்கள் நிதிஷ்குமார் INDIA கூட்டணியிலிருந்து வெளியேறியதை ஊதி பெரிதாக்கி, கூட்டணியே சரிந்து விட்டது போலவும், இந்த இழப்பில் இருந்து மீண்டு வர முடியாது என்பது போலவும் சித்தரிப்பதில் மும்முரமாக இருந்தன. INDIA கூட்டணி அண்ணல் அம்பேத்கர் கண்ட அரசியல் அமைப்பு அறத்தை காக்கவும், தந்தை பெரியார் கண்ட சமத்துவ உலகத்தை படைக்கவும் மக்களோடு செயல்படுகிறது.

நாட்டிலுள்ள சிறுபான்மையினர், இதர பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியல் சமூகத்தினர், பழங்குடியின மக்கள், பெண்கள், ஏழை எளிய மக்கள் என சாதி, மதம், பாலினம், வர்க்கம் என்ற வேற்றுமைகளால் ஒடுக்கப்படும் மக்களை பாஜக பெரும் துன்பங்களுக்கு உள்ளாக்கும் போதும் கூட ஒருவரால் அக்கட்சியுடன் கைகோர்க்க முடிகிறது என்றால், அவர் பிரிந்தது INDIA கட்டணியின் இலக்குக்கு நன்மையே. இருப்பினும் ஒரு மாநில கட்சி பாஜகவில் இணைவது அம்மாநிலத்தின் உரிமைகளை அடகு வைப்பதற்கு சமம் என்பதால், அம்மாநில மக்களின் நலனை எண்ணி வருந்தாமல் இருக்க முடியவில்லை." என்று குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக அவர் வெளியிட்ட பதிவில், "மீண்டும் ஏலத்தில் பீகார் சட்டமன்றம்! குதிரை பேரத்தில் பாஜகவும், நிதிஷ் குமாரும். ஆனால் வாக்களித்துத் தேர்வு செய்த மக்களை ஏல அரங்கில் காணோம்! பீகாரில் நடக்கும் அரசியல் கூத்தை காணும் போது 'கருத்தியல் ரீதியாக அங்கு மக்கள் அரசியல் படுத்தப்படவில்லை என்ற உண்மை' தெளிவாக தெரிய வந்துள்ளது. தமிழ் நாட்டில் மக்கள் விருப்பதிற்கு எதிராக அரசியல் நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் திராவிட இயக்கங்கள் கருதியல் சார்ந்த அரசியலை தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சென்று உள்ளன." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications